எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முழுசா ரூ. 20,000 குறைப்பு.. ஓலா வெளியிட்ட சூப்பர் ஆஃபர்

விலை குறைப்பு ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படும். இந்த ஸ்கூட்டரின் உண்மை விலை ரூ. 70 ஆயிரம் ஆகும்.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முழுசா ரூ. 20,000 குறைப்பு.. ஓலா வெளியிட்ட சூப்பர் ஆஃபர்
Published on

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது S1 X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு சிறப்பு விலை குறைப்பு அறிவித்து இருக்கிறது. இந்த விலை குறைப்பு ஸ்டாக் இருக்கும் வரை மட்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை குறைப்பின் படி ஓலா S1 X மாடல் ரூ. 49 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். விலை குறைப்பு ஓலா S1 X 2 கிலோவாட் ஹவர் மாடலுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 70 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

ஸ்டாக் கிளியரன்ஸ் விற்பனையின் கீழ் இந்த ஸ்கூட்டருக்கு ரூ. 20 ஆயிரம் விலை குறைப்பு வழங்கப்படுகிறது. இந்த மாடல் முழு சார்ஜ் செய்தால் 95 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் திறன் கொண்டுள்ளது. மேலும் மணிக்கு அதிகபட்சம் 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com