ஸ்கூட்டருக்கு ரூ. 20,000 தள்ளுபடி அறிவித்த ஓலா எலெக்ட்ரிக்

நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.சிறப்பு சலுகைகள் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
ஸ்கூட்டருக்கு ரூ. 20,000 தள்ளுபடி அறிவித்த ஓலா எலெக்ட்ரிக்
Published on

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. இவை ஜனவரி 15-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி ஓலா S1 X பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 20 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது. ஓலா S1 ப்ரோ மற்றும் ஓலா S1 ஏர் மாடல்களை வாங்கும் போது ரூ. 6 ஆயிரத்து 999 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் ரூ. 3 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.

இவைதவிர தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டு மாத தவணைகளுக்கு ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் முன்பணம் செலுத்தாமல் வாகனம் வாங்கும் வசதி, வட்டியில்லா மாத தவணை முறை, 7.99 சதவீத வட்டி போன்ற நிதி சலுகைகளும் வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் S1 X - S1 X (பேஸ்), S1 X (3 கிலோவாட் ஹவர்) மற்றும் S1 X பிளஸ் - S1 ஏர் மற்றும் S1 ப்ரோ போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

ஓலா S1 ஏர் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999 என்றும் S1 ப்ரோ விலை ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com