நாளை அறிமுகமாகும் ஓலா ஜென்-3 ஸ்கூட்டர்கள்.. விலை எவ்வளவு தெரியுமா?

ஜென் 3 மாடலிலும் தற்போதைய மாடல்களில் உள்ளதை போன்ற அம்சங்களே வழங்கப்படும் என்று தெரிகிறது. புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட டி.எஃப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
நாளை அறிமுகமாகும் ஓலா ஜென்-3 ஸ்கூட்டர்கள்.. விலை எவ்வளவு தெரியுமா?
Published on

பைக் பிரியர்களுக்கு புது மாடல்கள் வரவர அதன் மீதான ஆர்வமும் அதிகரிக்கும். அதே சமயத்தில் தங்களின் பொருட்செலவுக்கு ஏற்றார் போல் இருந்தால் கேட்கவே வேண்டாம். கடந்த ஆண்டு ஓலா நிறுவனம் அறிவித்த ஓலா ஜென் 3 ஸ்கூட்டரின் டீசர் வீடியோ வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ஓலா ஜென் 3 ரேஞ்ச் ஸ்கூட்டரின் அறிமுகத்திற்காக பலரும் காத்திருந்தனர்.

இந்த நிலையில், ஓலா எலெக்ட்ரிக் அதன் ஜென் 3 ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நாளை அறிமுகப்படுத்த உள்ளது. இது தற்போதைய மாடல்களை விட அதிக அம்சங்கள் கொண்டது, மேம்பட்டது மற்றும் இலகுவானது என்று நம்பப்படுகிறது.

மோட்டார், பேட்டரி மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றை ஒரு யூனிட்டில் ஒருங்கிணைக்க அந்நிறுவனம் பேட்டரி கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதற்காக ஜென்-1 மாடலில் வழங்கப்பட்ட 10 பிராசஸர்கள், ஜென்-2 மாடல்களில் நான்காக குறைக்கப்பட்டன. தற்போது ஜென் 3 மாடல்களில் இது மேலும் குறைந்து ஒற்றை பிராசஸருடன் அறிமுகம் செய்யப்படுகிறது. இது திருத்தப்பட்ட ஆர்கிடெக்ச்சரில் வயரிங் அமைப்பை பெருமளவு மாற்றியுள்ளதோடு, அதன் சிக்கலையும் குறைக்கும்.

அம்சங்களைப் பொறுத்தவரை, ஜென் 3 மாடலிலும் தற்போதைய மாடல்களில் உள்ளதை போன்ற அம்சங்களே வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட டி.எஃப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இந்த அமைப்பை இயக்கும் மென்பொருள் புதுப்பிக்கப்படும். இத்துடன் ADAS அம்சங்கள் வழங்கப்படுகிறது. எனினும், இது ஆரம்பத்தில் வழங்கப்படாமல், அப்டேட் மூலம் பின்னர் தான் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்திய சந்தையில் ஓலா S1 X 2kWh மாடலின் விலை ரூ. 79,999 (எக்ஸ்-ஷோரூம்) என்று துவங்கும் என தெரிகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1.59 லட்சமும், 4kWh மற்றும் 3kWh மாடல்களின் விலை முறையே ரூ. 1.5 லட்சம் மற்றும் ரூ. 1.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com