கைனடிக் லூனா எலெக்ட்ரிக் முன்பதிவு துவக்கம் - விரைவில் வெளியீடு

இ-லூனா ஸ்கூட்டருக்கான டீசர் வெளியானது. இ லூனா முன்பதிவு துவங்கியுள்ளது.
கைனடிக் லூனா எலெக்ட்ரிக் முன்பதிவு துவக்கம் - விரைவில் வெளியீடு
Published on

இந்திய சந்தையில் அதிக பிரபலமாக இருந்த மொபெட் மாடல் லூனா. இதனை உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வந்த கைனடிக் கிரீன் நிறுவனம் இந்திய சந்தையில் லூனா மாடலை மீண்டும் அறிமுகம் செய்வதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

மேலும் புதிய இ-லூனா ஸ்கூட்டருக்கான டீசரை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. டீசர் மட்டுமின்றி இ லூனா ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளும் துவங்கியுள்ளது. முன்பதிவு கட்டணம் ரூ. 500 ஆகும். வெளியீடு பிப்ரவரி மாத வாக்கில் நடைபெறும் என தெரிகிறது.

இ லூனா மாடலின் ஒட்டுமொத்த தோற்றம் அதன் முந்தைய வெர்ஷனை தழுவியே இருக்கும். இதில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், ஸ்ப்லிட் ரக சீட் வழங்கப்படுகிறது. புதிய இ லூனா மாடலில் எல்.சி.டி. கிளஸ்டர் வழங்கப்படுகிறது.

இதில் வழங்கப்படும் பேட்டரி மற்றும் மோட்டார் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. இந்த மாடலில் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், டூயல் ரியர் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்படுகின்றன. பிரேக்கிங்கிற்கு டிரம் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com