புதிய ஸ்டைலிஷான நிறங்களில் வெளியாகவுள்ள ஹோண்டாவின் பைக்குகள்

இந்த பைக்குகளின் எக்ஸ் ஷோரும் விலை முறையே ரூ.1.70 லட்சம், ரூ.1.74 லட்சமாகவுள்ளது.
ஹோண்டா சிபி 350 பைக்
ஹோண்டா சிபி 350 பைக்
Published on

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனையில் உள்ள H'ness CB350 மற்றும் CB350 RS பைக்குகளுக்கு புதிய நிறங்களை அறிவித்துள்ளது.

சிபி350, புதிய மேட் கிரே ஷேடுடன் மோனோ டோன் ஃபினிஷ் நிறத்தில் வரவுள்ளது. சிபி350 சிங்கிள் டோன் குளாசி ப்ளூ பெயிண்ட் நிறத்தில் வர இருக்கிறது. இந்த ஆப்ஷனில் பைக்கின் பிரண்ட் ஃபெண்டர் மற்றும் இன்ஜின் கவர்களில் பிளாக் ஃபினிஷ் வழங்கப்படவுள்ளது.

இதைத்தவிர ஹார்ட்வேர் உள்ளிட்ட அம்சங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த மோட்டார் பைக்குகளில் 349 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளன. இது 5,500rpm-ல் 20.8bhp பவரையும், 3000rpm-ல் 30Nm பீக் டார்க்கையும் தரவள்ளது. இதன் டிரான்ஸ்மிஷன் 5 ஸ்போட் யூனிட்டிலேயே இருக்கிறது.

ஹோண்டா H'ness CB350 பைக்கின் டி.எல்.எக்ஸ் வேரியண்டின் விலை ரூ.1.70 லட்சமாகவும், டி.எல்.எக்ஸ் ப்ரோ வேரியண்டின் விலை ரூ.1.74 லட்சமாகவும் உள்ளது. CB350 RS மோனோடோனின் விலை ரூ.1.74 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com