எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 27,000 மதிப்பிலான பலன்கள் - ஹீரோ அசத்தல்

பயனர்களுக்கு ரூ. 27 ஆயிரம் மதிப்பிலான பலன்களை வழங்குகிறது. 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டி வழங்கப்படுகிறது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 27,000 மதிப்பிலான பலன்கள் - ஹீரோ அசத்தல்
Published on

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது விடா V1 ப்ரோ வாங்குவோருக்கு புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. ஹீரோவின் எலெக்ட்ரிக் வாகன பிரிவு விடா பிராண்டு விடா அட்வான்டேஜ் பேக்கேஜ் அறிவித்து இருக்கிறது. இதில் பயனர்களுக்கு ரூ. 27 ஆயிரம் மதிப்பிலான பலன்களை வழங்குகிறது.

ஏற்கனவே விடா V1 ப்ரோ பயன்படுத்துவோர் புதிய அட்வான்டேஜ் பேக்கேஜை எவ்வித கட்டணமும் இன்றி ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் பெற முடியும். இதில் இரண்டு பேட்டரிகளுக்கும் ஐந்து ஆண்டுகள் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டி வழங்கப்படும்.

இத்துடன் 2 ஆயிரத்திற்கும் அதிக சார்ஜிங் பாயிண்ட்களை இலவசமாக பயன்படுத்தும் வசதி, விடா வொர்க்ஷாப்களில் இலவச சர்வீஸ், 24x7 ரோடு சைடு அசிஸ்டன்ஸ், மை விடா செயலியில் உள்ள அனைத்து கனெக்டிவிட்டி மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் புதிய விடா V1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சத்து 26 ஆயிரத்து 200, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 165 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com