ரிஸ்டா மாடல் விலையை உயர்த்தும் ஏத்தர் நிறுவனம்

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை உயர்த்தப்படுகிறது. விலை உயர்வு பற்றிய தகவல் வெளியானது.
ரிஸ்டா மாடல் விலையை உயர்த்தும் ஏத்தர் நிறுவனம்
Published on

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரிஸ்டா மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி இந்த ஸ்கூட்டரின் விலை ரூ. 4 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 6 ஆயிரம் வரை அதிகரிக்கும் என்று தெரிகிறது.

இந்திய சந்தையில் ஏத்தர் ரிஸ்டா மாடல் S, Z 2.9 மற்றும் Z 3.7 என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம், ரூ. 1 லட்சத்து 27 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 46 ஆயிரம் ஆகும்.

இத்துடன் ப்ரோ பேக் வாங்கும் போது மூன்று வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 13 ஆயிரம், ரூ. 15 ஆயிரம் மற்றும் ரூ. 20 ஆயிரம் அதிகரிக்கும். 2025, ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து ஏத்தர் ரிஸ்டா மாடலின் விலை உயர இருக்கும் நிலையில், எந்த வேரியண்டிற்கு எவ்வளவு விலை உயரும் என்பது பற்றிய தகவல் இல்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com