எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வேற லெவல் சலுகைகள் வழங்கும் ஏத்தர் எனர்ஜி

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வேற லெவல் சலுகைகள் வழங்கும் ஏத்தர் எனர்ஜி

எட்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டி பெற முடியும். ரூ. 10 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
Published on

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது 450 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளன. இந்த சலுகைகளின் படி ஏத்தர் 450X ப்ரோ பேக் வாங்கும் போது ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் எட்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டி பெற முடியும்.

இத்துடன் ஒரு வருடத்திற்கு ஏத்தர் சார்ஜிங் க்ரிட் பயன்படுத்தும் வசதியை பெறலாம். தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 10 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஏத்தர் 450 அபெக்ஸ் மாடலுக்கும் இந்த சலுகைகள் பொருந்தும்.

இந்திய சந்தையில் ஏத்தர் நிறுவனம் தற்போது- 450S, 450X, 450 அபெக்ஸ் மற்றும் ரிஸ்டா என நான்கு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதில் ரிஸ்டா மாடலை ஏத்தர் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலான டிசைன் கொண்டுள்ளது.  

X

Maalai Malar
www.maalaimalar.com