ஏத்தர் ஸ்கூட்டர் வாங்க சூப்பர் சான்ஸ்.. ரூ. 24 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிப்பு

60 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை வாரண்டி வழங்கப்படுகிறது. ஏத்தர் நிறுவனம் டிசம்பர் மாத சலுகைகளை அறிவித்துள்ளது.
ஏத்தர் ஸ்கூட்டர் வாங்க சூப்பர் சான்ஸ்.. ரூ. 24 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிப்பு
Published on

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டிசம்பர் மாத சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ. 24 ஆயிரம் வரையிலான தள்ளுபடி மற்றும் பலன்கள் வழங்கப்படுகின்றன.

இதில் ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 1500 வரை கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ரூ. 12 ஆயிரம் வரையிலான சேமிப்புகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுப்படும். "ஏத்தர் ப்ரோடெக்ட் டி.எம்." பெயரில் நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது. இதில் 5 ஆண்டுகள் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை வாரண்டி வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் இந்திய இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தங்களது மாடல்களுக்கு சலுகைகளை வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த வகையில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் டிசம்பர் மாத சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

டிசம்பர் மாத சலுகைகள் தவிர ஏத்தர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய 450X அபெக்ஸ் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது ஏத்தர் இதுவரை அறிமுகம் செய்ததிலேயே விலை உயர்ந்த மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com