2027 பல்சர் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது பஜாஜ் - விலை மற்றும் முழு விவரங்கள்!

புதிய பல்சர் சீரிஸ் மாடல்களில் கணிசமான அப்டேட்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
2027 Bajaj Pulsar
Published on

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புகழ்பெற்ற இரண்டு மாடல்களான பஜாஜ் பல்சர் 125 மற்றும் பல்சர் 150 சீரிஸ் மாடல்களை மேம்படுத்தியது. புதிய பல்சர் 125 விலை ரூ. 92,990-இல் இருந்தும், பல்சர் 150 விலை ரூ. 1.15 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும் ஹார்டுவேர் அப்டேட்களுடன் முக்கிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

வடிவமைப்பைப் பொறுத்தவரை, இரண்டு மோட்டார்சைக்கிள்களும் ஒரே மாதிரியான வடிவமைப்பு கொண்டுள்ளன மற்றும் முழுமையான LED அமைப்பை கொண்டுள்ளன.

இருப்பினும், முக்கிய மாற்றங்கள் ஹார்டுவேர் பிரிவில்தான் உள்ளன. அவை இப்போது பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனையும், புதிய எக்ஸாஸ்ட் அமைப்பையும் பெற்றுள்ளன. மேலும், டைமண்ட் ஃபிரேம் கொண்டுள்ளன.

சிறப்பு அம்சங்கள்:

அம்சங்களை பொறுத்தவரை, பஜாஜ் பல்சர் 125 மற்றும் 150 மாடல்களில் புதிய 5-இன்ச் TFT கன்சோல், நேவிகேஷன் மற்றும் ஸ்கிரீன் மிரரிங் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. பல்சர் 125 மாடலில் ஸ்போர்ட், ரோடு மற்றும் ரெயின் என மூன்று ரைடு மோட்களும், ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டமும் உள்ளன. மேலும், டைப்-சி சார்ஜிங் போர்ட் இதில் இடம்பெற்றுள்ளது.

பிரேக்கிங் அமைப்பைப் பொறுத்தவரை, பல்சர் 125 மாடலில் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. அதே சமயம், பல்சர் 150 மாடலில் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளுடன் கூடிய இரட்டை டிஸ்க் பிரேக் அமைப்பு உள்ளது.

மூன்று வேரியண்ட்டுகளில் வழங்கப்படும், இதில் டாப்-ஸ்பெக் வேரியண்ட்டில் ஸ்ப்ளிட்-சீட் அமைப்பு இடம்பெறும். கீழ்நிலை வேரியண்ட்டுகளில் சிங்கிள்-பீஸ் சீட் அமைப்பு தொடரும்.

என்ஜின்:

பஜாஜ் பல்சர் 125 மாடலிில் 11.6 bhp பவர் மற்றும் 11.4 Nm நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் 124.38cc சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய பல்சர் 150 மாடலில் 13.8 bhp பவர் மற்றும் 14.1 Nm நியூட்டன் மீட்டர் டார்க் திறன் வெளிப்படுத்தும், ஃப்யூல் இன்ஜெக்ஷன் மற்றும் ட்வின் ஸ்பார்க் தொழில்நுட்பத்துடன் கூடிய 149.5cc சிங்கிள்-சிலிண்டர், ஃபோர்-ஸ்ட்ரோக், ஆயில்-கூல்டு என்ஜினை பெறுகிறது.

இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களும் ஸ்டார்ட் மற்றும் கியர் ஷிஃப்டுகளை வழங்கும் நோக்கில், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், வெட் மல்டி-பிளேட் கிளட்ச் மற்றும் எலக்ட்ரானிக் இக்னிஷன் சிஸ்டம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் பல்சர் 150 ஆனது ஹோண்டா சிபி யூனிகார்ன் 160 மற்றும் டி.வி.எஸ். அப்பாச்சி ஆர்.டி.ஆர். 160 ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது, அதே சமயம் பல்சர் 125 ஆனது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர், டி.வி.எஸ். ரைடர் 125 மற்றும் ஹோண்டா எஸ்.பி. 125 ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com