ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் புத்தம் புதிய விட்டாரா பிரெஸ்ஸா அறிமுகம்

மாருதி சுசுகி நிறுவனத்தின் புத்தம் புதிய விட்டாரா பிரெஸ்ஸா கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
2020 விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்
2020 விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்
Published on

மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டி.ஆர்.எல்.கள், டெயில் லைட்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 1.5 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் என்ஜின்ம் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது.

புதிய பி.எஸ்.6 என்ஜின் 103 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 138 என்.எம். டார்க் செயல்திறன், 5 ஸ்பீட மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய விட்டாரா பிரெஸ்ஸா காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டு விட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com