ஜாகுவார் எலெக்ட்ரிக் கார் வேரியண்ட் விவரம்

ஜாகுவார் நிறுவனத்தின் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் வேரியண்ட்களின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஜாகுவார் ஐ பேஸ்
ஜாகுவார் ஐ பேஸ்
Published on

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது  2021 ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இது முந்தைய மாடலை விட அதிக அம்சங்களை கொண்டிருக்கிறது. 

புதிய ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது. இதன் காரணமாக ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் மாடல் இந்திய சந்தையில் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் எஸ், எஸ்இ மற்றும் ஹெச்எஸ்இ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. மூன்று வேரியண்ட்களும் ஒற்றை பவர் டிரெயின் ஆப்ஷனில் கிடைக்கிறது. 

இது புஜி வைட், கலெட்ரா ரெட், சன்டோரினி பிளாக், யுலொங் வைட், இன்டஸ் சில்வர், பிரென்ஸி ரெட், கேசியம் புளூ, பொராஸ்கோ கிரே, இகர் கிரே, போர்டோபினோ புளூ, பரலொன் பியல் பிளாக் மற்றும் அருபா என மொத்தம் 12 நிறங்களில் கிடைக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com