மீனம்- வார ராசிபலன் 5.4.2026 முதல் 11.4.2026 வரை

உறவினர்கள் நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும்.
மீனம்- வார ராசிபலன் 5.4.2026 முதல் 11.4.2026 வரை
Published on

மீனம்

கடனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய வாரம். ராசியில் சூரியன் செவ்வாய் சனி சேர்க்கை உள்ளது. சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். எதிரிகளால் சங்கடம் உறக்கமில்லாமல் குழப்பம் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். காதல் காலை வாரும். பூர்வீகச் சொத்தில் வம்பு, வழக்கு உருவாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். ராசி அதிபதி கேந்திரத்தில் இருப்பதால் எத்தனை இடர் வந்தாலும் சமாளிக்க கூடிய மனப்பக்குவம் உண்டாகும்.

அரசின் ஆதரவு மானியம் கிடைக்கும். உறவினர்கள் நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். அலைச்சல் அதிகரிக்கும். முக்கிய செயல்களில் நன்மை தீமை அறிந்து முடிவு எடுப்பது நல்லது. போதிய பண வரவு இருந்தாலும் எதிர்பாராத செலவும் இருக்கும். எல்லா துறையினருக்கும் எதிர்பார்த்த பதவி உயர்வு, திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். பங்குச் சந்தை ஆதாயம் பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு. வியாழக்கிழமை குரு கவசம் படித்து குருபகவானை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com