

துன்பங்கள் குறையும் வாரம். ராசிக்கு செவ்வாயின் நான்காம் பார்வை உள்ளது. தனித்த அடையாளத்துடன் பிறருக்கு முன் மாதிரியாக செயல்படுவீர்கள். வாக்கு வன்மை பெருகும்.பதவி உயர்வு, பணி மாற்றம் ஏற்படலாம்.
இழுபறியாக இருந்த வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். வட்டி தொழில், ரியல் எஸ்டேட், ஏஜென்சி தொழில் புரிபவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான விவகாரங்கள் தடை தாமதமானாலும் நினைத்தபடி சாதகமாக நிறைவேறும்.
குடும்பத்தில் நடைபெறும் சுப நிகழ்வுகளால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கிய தொல்லைகள் அகலும். திருமண முயற்சி வெற்றி தரும்.
10.5.2026 அன்று பகல் 12.13 முதல் 12.5.2026 அன்று இரவு 7.25 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைப்பதை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சாலையோரம் வசிப்பவர்களுக்கு நீர் மோர் தானம் வழங்கவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406