

வசதிகள் பெருகும் நாள். வருமானம் திருப்தி தரும். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட மனக்கலக்கம் அகலும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பதவி உயர்வை முன்னிட்டு குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று பணிபுரிவீர்கள்.
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். இல்லத்தில் நல்ல சம்பவம் நடைபெறும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் உண்டு.
முன்னேற்றம் கூடும் நாள். கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக் கொள்வீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
நட்பால் நலம் கிடைக்கும் நாள். வழக்கமாகச் செய்யும் பணிகளில் இன்று மாற்றம் செய்வீர்கள். பயணத்தால் பலன் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
லாபகரமான நாள். செல்வாக்கு மேலோங்கும். நீண்டதூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடும். உத்தியோகத்தில் இருந்த இடர்பாடுகள் அகலும்.
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை.
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும், உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
பாசம் மிக்கவர்களின் நேசம் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.
வேதனை தந்தவர்கள் விலகிச் செல்லும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பழைய கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும். உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பர். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.