Today Rasipalan: இன்றைய ராசிபலன் 3.10.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கும் நாள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
இன்றைய ராசிபலன்: 25.05.2026 - இந்த ராசிக்காரர்கள் தேவைகள் பூர்த்தியாகும் நாள்...
Published on: 

மேஷம்

உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும் நாள். உடல் நலனில் அக்கறை தேவை. வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்க விரயம் ஏற்படும்.

ரிஷபம்

வருமானம் உயரும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். உடல் நலம் சீராகும். தொழிலில் எதிர்பாராத லாபம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

மிதுனம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பழகிய சிலருக்காக பணத்தைச் செலவிடும் சூழ்நிலை உண்டு.

கடகம்

விரயங்கள் கூடும் நாள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும் உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டு. தொழிலில் புதியவர்கள் வந்திணைவர்.

சிம்மம்

புதிய பாதை புலப்படும் நாள். தொழில் ரீதியாகப் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்புகள் தானே தேடிவரும்.

கன்னி

புது முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டுவந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் நிரந்தரப் பணிக்கான தகவல் வரலாம்.

துலாம்

பஞ்சாயத்துகள் சாதகமாக அமையும் நாள். வருமானம் உயரும். இடம், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து வரன்கள் வரலாம்.

விருச்சிகம்

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். ஆதாயமில்லாத அலைச்சல் உண்டு. வேலையாட்களால் வேதனை ஏற்படும். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை.

தனுசு

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிய வேண்டிய நாள். தன்னிச்சையாகச் செயல்பட நினைப்பீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மகரம்

நண்பர்களின் சந்திப்பால் நன்மை ஏற்படும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வாகன மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள்.

கும்பம்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும். அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் வந்து சேரும்.

மீனம்

குடும்பச்சுமை கூடும் நாள். சச்சரவுகள் அகலும். சகோதர பாசம் கூடும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com