

வாழ்த்துச் செய்திகளால் மகிழ்ச்சி கூடும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஆதரவு கிடைக்கும். நின்று போன கட்டிடப்பணியை மீதியும் தொடருவீர்கள்.
யோகமான நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.
போட்டிகளில் வெற்றி கிட்டும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மை ஏற்படும்.
உற்சாகம் அதிகரிக்கும் நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நிறைவேறும்.
விழாக்களில் கலந்து கொண்டு மகிழும் நாள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரிவர்.
சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். கடன்சுமை குறையப் புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். பயணங்களால் வியக்கும் செய்தி உண்டு.
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். நீங்கள் சந்திக்க நினைத்த ஒருவர் இல்லம் தேடி வருவர்.
பாராட்டும், புகழும் கூடும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொகை எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு.
பற்றாக்குறை அகலும் நாள். பாசம் மிக்கவர்களின் நேசம் கிட்டும். பூர்வீக சொத்துகளில் லாபம் உண்டு. உடல்நலம் கருதிச் செலவிடுவீர்கள். பயணம் பலன் தரும்.
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உறவினர்கள் சிலர் உங்களிடம் உதவி கேட்டு நச்சரிப்பர். பயணங்களின்போது கவனம் தேவை.
உடல்நலத்தில் உபாதைகள் உண்டு. உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்தலாம். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும்.
யோகமான நாள். தொழிலில் லாபம் உண்டு. அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். திருமணப் பேச்சுகள் முடிவாகும்.