விருச்சிகம்- குரு அதிசார வக்ர பெயர்ச்சி பலன்கள்

ோகத்தில் இருப்பவர்கள் குறைந்த ஊதியத்திற்கு அதிக நேரம் உழைக்க நேரும்.உழைத்த
Viruchigam
Published on: 

தனிமை விரும்பியான விருச்சிக ராசியினரே... இதுவரை ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் நின்ற உச்ச குரு பகவான் 31.10.2026 அன்று அதிசாரமாக பத்தாமிடமான சிம்ம ராசிக்கு செல்கிறார். பின் வக்ர கதியில் மீண்டும் 25.1.2027 அன்று கடக ராசிக்கு செல்கிறார். இதனால் விருச்சிக ராசிக்கு ஏற்படப் போகும் பலன்களை பார்க்கலாம்

அதிசார, வக்ரகுருவின் பொது பலன்கள்

விருச்சிக ராசிக்கு 2,5ம் அதிபதியான குரு அதிசாரத்தில் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்க விருக்கும் குரு பகவான் பதவியை பறிப்பாரா? அதிர்ஷ்ட வருமானத்தை தருவாரா? தொழில் ஸ்தானத்திற்கு செல்வதால் தொழிலில் இடர் ஏற்படுமோ?தொழில் லாபம் கிடைக்குமா? என்ற மன குழப்பம் ஏற்படலாம். பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகுமோ? என்ற சந்தேகங்கள் எழும். குரு பத்தாமிடத்திற்கு செல்வது சற்று சுமாரான பலனாகும். குரு பகவான் தான் நின்ற இடத்தை விட பார்வை படும் இடங்களை புனிதப்படுத்துவார் என்பது ஜோதிடவிதி.அதன்படி குருவின் பார்வை பதியும் 2 , 4, 6ம் இடங்கள் மூலம் விருச்சிக ராசியினர் ராசியினர் சுப பலன்கள் பெறுவது உறுதி.அதே நேரத்தில் பத்தில் நிற்கும் குரு தொழிலை ஒரு மனிதன் எப்படி தக்க வைத்துக் கொள்வது என்ற செப்படி வித்தையை உங்களுக்கு நிச்சயம் கற்பிப்பார்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறைந்த ஊதியத்திற்கு அதிக நேரம் உழைக்க நேரும்.உழைத்த பணம் காலதாமதமாக கிடைக்கும்.

வாக்கு வன்மை

தொழில், உத்தியோகம் தொடர்பான பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.ஜனன கால ஜாதகத்தில் தசா புத்தி சாதகமற்றவர்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும். மற்றவர்களுக்கு சிறிய மன வருத்தம் இருக்கும். பெரிய பாதிப்பு இருக்காது. வாக்கு தோஷம் நிவர்த்தியாகும். வாக்கு வன்மை அதிகரிக்கும்.சதா எதையாவது பேசிக்கொண்டே இருப்பவர்கள் கூட அமைதியை விரும்புவீர்கள். நியாயம், தர்மம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பிரிந்த குடும்ப உறவுகள் நடந்ததை மறந்து கூடி மகிழ்வார்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகளும் ஆடம்பர விருந்துகளும் நடந்து கொண்டே இருக்கும். நல்ல விதவிதமான உணவு சாப்பிடும் யோகம் உண்டாகும்.பேச்சைத் தொழிலாக கொண்டவர்களுக்கு அதிர்ஷ்டம் பணமாக கூரையைப் பிய்த்துக் கொட்டும். பணப் பற்றாக்குறை அகலும்.கையில் ஐந்து ரூபாய் பணம் இல்லாமல் ஆரம்பித்த சுப காரியங்கள் வெகு விமரிசையாக, ஆடம்பரமாக நடக்கும்.திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு பொருள் குறைபாடு இருப்பவர்கள் குருவின் அதிசார காலத்தை பயன்படுத்தினால் வேண்டிய பொருள் வரவு தேடிவரும். கண்களிலுள்ள குறைபாட்டை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்ய ஏற்ற காலம்.பால்ய வயதில் உள்ள குழந்தைகளை அடிப்படை கல்விக்காக பள்ளியில் சேர்க்கலாம். தாயின் ஆரோக்கியம் சீராகும். தாயுடன் இருந்த கருத்து வேறுபாடு குறையும்.தாய் வழிச் சொத்து பாகப் பிரிவினையில் இருந்த சர்ச்சைகள் நீங்கி முழுப் பங்கும் தாயின் பெயருக்கு மாறுதலாகிவிடும்.

பொருளாதாரம்

புதிய கடன் வாங்கி பழைய கடனை சமாளிப்பார்கள். கடனையும் வட்டியையும் நினைத்து பயந்து நோயை வரவழைத்தவர்களுக்கு கடனை அடைக்கும் மார்க்கம் தென்படும்.இதுவரை கடன் இல்லாதவர்கள் வாங்காதவர்கள் கூட கடன் வாங்குவதைப் பற்றி யோசிப்பார்கள் அல்லது அசையும், அசையா சொத்து வாங்க அல்லது தொழில் முன்னேற்றத்திற்கு கடன் வாங்கலாம். விற்க முடியாமல் பயன்படுத்த முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்று பல லட்சங்களாக மாறும்.வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் குடியிருக்கும் வீட்டையே சகாய விலைக்கு வாங்குவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.வாடகைக்கு போகாமல் கிடந்த அசையும் அசையாச் சொத்துக்கள் நல்ல வாடகை தாரர்கள் கிடைப்பார்கள். விருச்சிக ராசி விவசாயிகளுக்கு நிலம் பொன் விளையும் பூமியாகும். நீர்ச் சத்து நிறைந்த காய்களை பயிரிடும் விவசாயிகளுக்கு மகசூல் அதகரிக்கும்.கால்நடை வளர்ப்பவர்கள்.

பெண்கள்

பத்தில் குரு வருவதால் நிறைய பெண்கள் அரசின் ஆதரவு மற்றும் மகளிர் சுய உதவிக்குழு மூலம் சுய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.பணப்புழக்கம் சரளமாக இருக்கும். புகழ், அந்தஸ்து, கெளரவம் மேலோங்கும்.உழைப்பிற்கு பின் வீண் அலைச்சல்,சுகவீனமும் இருக்கும்.வேலை செய்யும் இடத்தில் அதிக கவனம் தேவை.பழக்கம் இல்லாத நபர்களிடம் குடும்ப பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ளக் கூடாது.வாழ்க்கைத் துணையை அனுசரித்து செல்ல வேண்டும். விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் வாழ்நாள் வசந்தமாகும். கட்டுக்கடங்காத நோயின் பாதிப்பு குறையும்.உங்களை அவ்வப்போது சீண்டி வந்த உற்றார் உறவினர்கள், எதிரிகள் கண்டும் காணாது போல் சென்று விடுவார்கள்.தீராத கடன் மற்றும் வட்டி தொல்லையிலிருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும்.

மாணவர்கள்

நான்காமிடத்திற்கு குரு பார்வை இருப்பதால் கல்வி சார்ந்த பாதிப்புகள் அகலும். நண்பர்களின் சகாவாசத்தால் வீண் வம்பு, வழக்கு வீடுதேடி வரும்.தேவையற்ற விசயங்களை தவிர்த்துகல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் மீண்டும் படிப்பைத் தொடர்வார்கள். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பை பயன்படுத்தி படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் போட்டித் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்விக்கு முயற்சி செய்பவர்களுக்கு விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடத்திட்டத்தில் சேர வாய்ப்பு கிடைக்கும். கல்வி மந்த நிலை மற்றும் ஈடுபாடின்மையை தவிர்க்க விநாயகர் வழிபாடு செய்தல் அவசியம்.

உத்தியோகஸ்தர்கள்

உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகரிக்கும். குரு பலம் இழந்து வக்ரம் பெறும் போது மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிரிகளின் தொல்லை தலை தூக்கும். அண்டை அயலாரிடையே தேவையில்லாத பிரச்சனைகள் அதிகரிக்கும். கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் இயன்றவரை வாய்தா வாங்கி வழக்கை ஒத்தி வைக்கவும். ஆரோக்கிய தொல்லையிலிருந்து விடுபட மாற்று மருத்துவத்தை நாடவும்.சேமிப்புகள் கரையும். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க கூடாது.எதையும் பல முறை யோசித்து நிதானமாக செயல்பட பெரிய பாதிப்பு இல்லாமல் தப்பிக்க முடியும்.

முதலீட்டாளர்கள்

பத்தாமிட குரு புதிய தொழில் வாய்ப்பையும், மேன்மையையும் கொடுப்பார். அதன் மூலம் கம்பீரம் மற்றும் கெளவரத்தை வழங்குவார். ஜனன கால ஜாதகத்தில் சாதகமான தசாபுத்தி நடப்பவர்களுக்கு எதிர்பாராத தொழில் மாற்றம் ஏற்படும். தொழிலுக்கு மூத்த சகோதரரின் ஆதரவு கிடைக்கும். சாதகமற்ற தசா புக்தி இருந்தால் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. தொழில் கூட்டாளிகள் பிரிந்து செல்வார்கள். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பதில் தடை தாமதம் இருக்கும்.ஒரு சில தொழில் செய்பவர்களுக்கு முதலாளி ஆசை போய் உத்தியோகத்தில் ஆர்வம் ஏற்படும்.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சியால் அவமானம் அடைந்து கட்சி மற்றும் பதவியிலிருந்து நீக்கப்படலாம். தன்னலமற்ற பொதுச் சேவையை பிறருக்காகச் செய்யும் போது அனைத்தும் பரிபூரணமாக முடிந்து பாராட்டு கிடைக்கும். இதையே சுய நலனுக்காக செய்யும் போது வம்பு வழக்கும் குற்றமும் பதிவாகும். எனவே எந்த செயலையும் ஒரு முறைக்கு பல முறை திட்டமிட்டு செயல்பட வேண்டும். தினமும் வம்பு, வழக்கு என அலைந்து அரசியல் வாழ்க்கையே வெறுக்கும்.

பரிகாரம்

ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்யுங்கள். இதனால் தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஊரில் உள்ள ஸ்ரீ மகாலிங்கேஸ்வரரை வழிபட நிலையான நிரந்தரமான தொழில் உத்தியோகம் கிடைக்கும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X