

தடைபட்ட இன்பங்கள் தேடி வரும் வாரம். தற்போது கோச்சாரத்தில் ராசிக்கு 12-ம் மிடமான அயன சயன விரய ஸ்தானத்தில் நின்று ஏழரைச் சனியின் தாக்கத்தை வழங்கிய சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் சனிபகவானின் தாக்குதல் முழுமையாக குறையும். இந்த வாரம் சனி பகவான் மிக மிகச் சாதகமாக உள்ளார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்ற கூற்று உங்களுக்கு மிகவும் பொருந்தும். இந்த ஜென்மத்தில் நீங்கள் அடைய வேண்டிய அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்பங்களையும் வாரி வழங்கப்போகிறார். அதை பெற்றுக் கொள்ள தசா புத்தி மட்டும் சாதகமாக இருக்க வேண்டும். கவுரவப் பதவி, கவுரவப் பட்டம் கிடைக்கும். பங்குச் சந்தை மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகமாகும். புதிய ரத்த அணுக்கல் உற்பத்தியாகி நோய் எதிர்ப்பு சக்தி கூடும். 19.8.2026 அன்று நள்ளிரவு 2.30 முதல் 22.8.2026 அன்று பகல் 2.49 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கருட பஞ்சமி அன்று விரதம் இருந்து சர்ப்ப வழிபாடு செய்யவும்.