மேஷம்- 2026 வார ராசிபலன் 25.10.2026 முதல் 31.10.2026 வரை

நெருங்கிய உறவில் மகளுக்கு வரன் அமையும்.
Mesham
Published on: 

மேஷம்

பொறுமையுடன் செயல்பட வேண்டிய காலம். 2,7ம் அதிபதி சுக்ரன் வக்கிரமாக சஞ்சரிப்பதால் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு உண்டாகும். கடன் விஷயத்தில் நிறைய மாற்றம் ஏற்படும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். சிலர் பழைய கடனை அடைத்து விட்டு புதிய கடன் வாங்குவார்கள். சிலர் பூர்வீகச் சொத்தின் மூலம் கடன் பெறலாம். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். பொறுமையும் பொறுப்பும் சகிப்புத்தன்மையும் மிக அவசியம் நல்ல வேலை கிடைக்கும். தொழில் போட்டிகள் அதிகரிக்கும். இந்த வாரம் புதிய சொத்துக்கள், வாகனம் வாங்க அட்வான்ஸ் தொகை செலுத்துவீர்கள். நெருங்கிய உறவில் மகளுக்கு வரன் அமையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களால் ஆதாயம் மற்றும் இடமாற்றம் உண்டாகும். தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். வார இறுதியில் குரு பகவான் அதிசாரமாக பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்வதால் வாழ்க்கையின் பல முக்கியமான விஷயங்களை குடும்ப உறுப்பினர்களுடன் உட்கார்ந்து பேசி முடிவு எடுக்கும் வாய்ப்பு உள்ளது. பௌர்ணமி அன்று முருகன் வழிபாடு செய்யவும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com