மேஷம்- 2026 வார ராசிபலன் 15.11.2026 முதல் 21.11.2026 வரை

திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.
மேஷம்
மேஷம்
Published on: 

மேஷம்

தொழில் மாற்றங்கள் உண்டாகும் வாரம். மேஷ ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தை ராகுவும், நான்காமிடமான சுக ஸ்தானத்தை கேதுவும் நெருங்குகிறார்கள். சமுதாய அந்தஸ்து உயரும். புதிய தொழில் துவங்கும் ஆர்வம் உதயமாகும். தீர்மானங்களை எண்ணங்களை செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். இதுவரை நீங்கள் அனுபவித்த பிரச்சினைகள், சங்கடங்கள், கஷ்டங்கள், குறைந்து, உங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் ஏற்படும். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். சாதிக்க துடித்த விசயங்களை சாதிக்கும் துணிவும், சந்தர்ப்பமும் உருவாகும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. வெற்றியை நீங்கள் தேடிச் செல்ல வேண்டியதில்லை. வெற்றி உங்களைத் தேடி வரும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.தாய் வழி சொத்தை பிரிப்பதில் சில மனக்க சப்புகள் உருவாகலாம். சரபேஸ்வரரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X