

நினைப்பதெல்லாம் நடைபெறும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குருவுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இது குரு மங்கள யோக அமைப்பாகும். சுக ஸ்தானத்திற்குள் கேதுவும் தொழில் ஸ்தானத்திற்குள் ராகுவும் நுழைந்து விட்டார்கள். ரியல் எஸ்டேட், ஒப்பந்த தொழில், விவசாயிகளுக்கு எதிர்பார்த்த பலன் உண்டு. தொழிலில் உங்களை கவிழ்க்க நண்பர்களாக நல்லவர்களாக நடித்தவர்கள் ஏமாறுவார்கள். எடுக்கப்பட்ட முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு. நாணயம் நீடிக்கும். பிள்ளைகள் கல்விக்காக இடம் பெயர நேரலாம். தெய்வபக்தி கூடும். இதுவரை ஒத்தி வைத்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல நேரும். பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் தேடி வரும். எதிர்காலத் தேவைக்கான இன்சூரன்ஸ் பாலிசி அல்லது நலத்திட்டங்களில் சேமிப்பு போன்ற சுப செலவுகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு பொதுஜன ஆதரவு அதிகரிக்கும். கணவன் மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும். திருமணத் தடை அகலும். சிவ வழிபாட்டால் மேன்மையான பலன்களை பெற முடியும்.