ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள கிரெடிட் கார்ட்- இதை பயன்படுத்தினால் இத்தனை பலன்கள் பெறலாம்!

இந்த கார்டை பயன்படுத்துபவர்களுக்கு சலுகைகள், கேஷ்பேக்குகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
ஏர்டெல் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்ட்
ஏர்டெல் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்ட்
Published on

ஏர்டெல் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து ஏர்டெல் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் தேங்கஸ் செயலிக்கு சென்று இந்த கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த கார்ட் ஆக்டிவேட் செய்யப்பட்டவுடன் ரூ.500 அமேசான் இ-வவுச்சர் வழங்கப்படும்.

இந்த கார்ட்டை பயன்படுத்தி ஏர்டெல் சேவைகளுக்கு கட்டணம் செலுத்தும்போது 25 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படும். மேலும் மின்சாரம், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பில் கட்டணங்களுக்கு 10 சதவீதம் கேஷ்பேக், ஸ்விக்கி, ஜொமேட்டோ, பிக்பாஸ்கெட் ஆகியவற்றில் ஆர்டர் செய்யும்போது 10 சதவீத கேஷ்பேக் வழங்கப்படுகின்றன.

மொபைல், டிடிஹெச் ரீசார்ச், ஏர்டெல் பிளேக், எக்ஸ்ட்ரீம் ஃபைபர் ஆகிய சேவைகளுக்கு இந்த கார்டு மூலம் பணம் செலுத்தும்போது 25 சதவீதம் கேஷ்பேக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com