இன்றைய ராசிபலன்: 6.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்!

மேஷம் முதல் மீனம் வரை ராசிகளுக்கான இன்றைய பலன்கள்.
இன்றைய ராசிபலன்: 6.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்!
Published on

மேஷம்

நிதிநிலை உயர்ந்து நிம்மதி காணும் நாள். நினைத்தது நிறைவேறும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

ரிஷபம்

ஆதாயம் தரும் தகவலில் அக்கறை காட்டும் நாள். கல்யாண முயற்சி கைக்கூடும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

மிதுனம்

உற்சாகமாகப் பணிபுரியும் நாள், பிறர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும். வருமானம் உயரும்.

கடகம்

யோகமான நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு உண்டு. பயணம் பலன் தரும்.

சிம்மம்

மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். எதிர்பாராத தனலாபம் உண்டு. தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள்.

கன்னி

வம்பு, வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். பெரிய மனிதர்களின் ஆலோசனையால் பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள்.

துலாம்

நட்பு வட்டம் விரிவடையும் நாள். முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளைச் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

விருச்சகம்

எதிலும் கவனம் அதிகம் தேவைப்படும் நாள். வீணான குழப்பம் தோன்றும். மற்றவர்களுக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களைச் செய்வீர்கள். சொத்துகளால் லாபம் உண்டு. திருமணத்தடை அகலும்.

மகரம்

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதியவர்கள் அறிமுகமாவர். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். கணிசமான தொகை கைகளில் புரளும்.

கும்பம்

புதிய பாதை புலப்படும் நாள். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப்பணி தொடரும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை மேலதிகாரிகள் கற்றுத் தருவர்.

மீனம்

சிக்கல்கள் விலகிச் சிறப்புகள் வந்து சேரும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள். வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

X

Maalai Malar
www.maalaimalar.com