

முன்னேற்றம் கூடும் நாள். சாமர்த்தியமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.
சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். பூமி விற்பனையால் லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உள்ள நெளிவு சுழிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.
சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். பயணங்களால் பலன் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். கல்யாண முயற்சி கைகூடும்.
பற்றாக்குறை அகலும் நாள். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். இடம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
ஆதாயத்தைவிட விரயம் கூடும் நாள். திடீர் செலவுகளைச் சமாளிக்கப் பிறரிடம் கைமாத்து வாங்க நேரிடும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் உண்டு.
மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பொருளாதார நலன் கருதி வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
வளர்ச்சி கூடும் நாள். வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.
பெருமைகள் சேரும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
வரவு திருப்தி தரும் நாள். தொழில் மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள்.
நம்பிக்கைகள் நடைபெறும் நாள், நாணயப் பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள், புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு, தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
மனச்சுமை அகலும் நாள். மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு மேலதி காரிகளின் ஆதரவு உண்டு.
பிரச்சினைகள் அகலும் நாள். சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும், தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.