Today Rasipalan: இன்றைய ராசிபலன் 27.8.2026 - இந்த ராசிக்காரர்களின் கவலைகள் அகலும் நாள்

மறதியால் சில பணிகளைச் செய்யாமல் விட்டுவிடுவீர்கள்.
Today Rasi palan
Published on

மேஷம்

நினைத்தது நிறைவேறும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமணப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

ரிஷபம்

கவலைகள் அகலும் நாள். காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். புத்திசாலித் தனமான செயல்பாடுகளால் புகழ் கூடும். உத்தியோக முயற்சி பலன்தரும்.

மிதுனம்

வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். சிரித்துப் பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம். மறதியால் சில பணிகளைச் செய்யாமல் விட்டுவிடுவீர்கள்.

கடகம்

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். விரயங்கள் கூடும். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும்.

சிம்மம்

தடைகள் அகலும் நாள். தொழில் வளர்ச்சி உண்டு. அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.

கன்னி

மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெற்று மகிழ்ச்சி காணும் நாள். குடும்பத்திலுள்ள கருத்துவேறுபாடுகள் அகலும். இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும்.

துலாம்

நினைத்தது நிறைவேறும் நாள். நீண்ட தூரத்திற்கு இடமாற்றம் வரலாம். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகை கள் கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

விருச்சிகம்

வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். பயணங்களால் பலன் உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புக் கிட்டும்.

தனுசு

யோகமான நாள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். தொழிலில் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் எண்ணம் உருவாகும்.

மகரம்

கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும்.

கும்பம்

பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். அலைபேசி வழியில் அனுகூலச் செய்தி உண்டு. உத்தியோக பிரச்சினை நீடிக்கும்.

மீனம்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய திட்டமொன்றைத் தீட்டுவீர்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com