Today Rasipalan: இன்றைய ராசிபலன் 25.10.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
Rasipalan
ராசிபலன்
Published on: 

மேஷம்

ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். கையும் கூடும். பணநடமாட்டம் அதிகரிக்கும்.

ரிஷபம்

எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். பணவரவு திருப்தி தரும்.

மிதுனம்

வம்பு வழக்குகளைச் சமாளித்து வளம் காணும் நாள். கைமாற்றாக கொடுத்த தொகை வந்து சேரும். பிரபலமானவர்களின் நட்பால் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

கடகம்

கனவுகள் நனவாகும் நாள். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க எடுத்த புது முயற்சி வெற்றி தரும். நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

சிம்மம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்களின் விரோத மனப்பான்மையால் நடைபெற வேண்டிய காரியம் தாமதப்படும். வரவை விடச் செலவு கூடும்.

கன்னி

யோகமான நாள். முயற்சியில் வெற்றி கிட்டும். கல்யாணக் கனவுகள் நனவாகும். உத்தியோகத்தில் உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அகலும்.

துலாம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். உதிரி வருமானங்கள் உண்டு. உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

விருச்சிகம்

மலைவலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். வருங்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். சுபகாரியப் பேச்சு முடிவாகும்.

தனுசு

7 மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. மறைமுக எதிர்ப்புகளால் மனக்கலக்கம் உண்டு.

மகரம்

தெய்வீகச் சிந்தனை மேலோங்கும் நாள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு உண்டு. புது முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

கும்பம்

நல்ல தகவல் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சினை அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்

அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். தொழில் சீராக இருக்கும். முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். தெய்வ பலத்தால் சில காரியங்கள் முடியும்.

X

Maalai Malar
www.maalaimalar.com