மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

6 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன்
Published on

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து வேட்பாளர் தேர்வு நடைபெற்றது. 

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. வேட்பாளர் பட்டியலை கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.

கீழ்வேளூர் - நாகை மாலி

திருப்பரங்குன்றம் -பொன்னுத்தாய்

கந்தர்வக்கோட்டை- சின்னதுரை

அரூர் - குமார்

திண்டுக்கல் - பாண்டி

கோவில்பட்டி- சீனிவாசன்.

6 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com