search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மிகம்"

    • சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.
    • ஸ்ரீ கச்சியப்ப முனிவர் குரு பூஜை.

    குரோதி ஆண்டு சித்திரை-30 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சஷ்டி (முழுவதும்)

    நட்சத்திரம்: புனர்பூசம் பிற்பகல் 2.44 மணி வரை

    பிறகு பூசம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சஷ்டி விரதம். சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் காலை புஷ்பப் பல்லக்கிலும் இரவு ரிஷப வாகனததிலும் பவனி. வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் மேற்கு வீதியில் இருந்து நிலைக்கு வருதல். ஸ்ரீ கச்சியப்ப முனிவர் குரு பூஜை. காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-இன்பம்

    மிதுனம்-புகழ்

    கடகம்-வெற்றி

    சிம்மம்-அனுகூலம்

    கன்னி-உதவி

    துலாம்- நட்பு

    விருச்சிகம்-கடமை

    தனுசு- மேன்மை

    மகரம்-ஆசை

    கும்பம்-உயர்வு

    மீனம்-சுபம்

    • ராமானுஜருக்கு இவர் மீது எல்லையற்ற அன்பு உண்டு.
    • ஸ்ரீரங்க ஆலய நிர்வாகத்தின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு திறம்படச் செய்தார்.

    ராமானுஜருக்கு எத்தனையோ சீடர்கள் இருந்தாலும், மிக முக்கியமான சீடர்களில் ஒருவர் தாசரதி என்று அழைக்கப்படும் முதலியாண்டான். இவர் ராமானுஜரின் மருமகன் ஆவார். கிபி 1027 -ம் ஆண்டு சித்திரை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் சென்னை அடுத்த பூந்தமல்லிக்கு அருகில் பச்சைவர்ணபுரம் (தற்போதைய நசரத்பேட்டை) எனும் ஊரில் அனந்தநாராயணதீட்சிதர் மற்றும் நாச்சியாரம்மாள் (ராமானுசரின் தங்கை) எனும் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

    இவருக்கு "ராமானுசன் பொன்னடி" என்றும் "எதிராச பாதுகா" என்றும் "ராமானுஜர் திரிதண்டம்" என்றும் "ஆண்டான்" என்றும் பல பெயர்கள் உண்டு. ராமானுஜருக்கு இவர் மீது எல்லையற்ற அன்பு உண்டு.

    ராமானுஜர் காஞ்சிபுரத்தில் இருந்து வைணவப் பணிகளுக்காக திருவரங்கம் சென்ற பொழுது முதலியாண்டான் கூரத்தாழ்வாரோடு இணைந்து சென்றார். அங்கே அவருக்கு எல்லா விதத்திலும் உதவி செய்தார். ராமானுஜரின் கட்டளைப்படி முதலியாண்டான், ஸ்ரீரங்க ஆலய நிர்வாகத்தின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு திறம்படச் செய்தார்.

    முதலியாண்டனின் குமாரராகிய கந்தாடை ஆண்டான் எம்பெருமானாரின் அனுமதிபெற்று, எம்பெருமானாரின் வடிவம் ஒன்றை உருவாக்கினார். எம்பெருமானாரும் இந்த விக்ரஹத்தை மிகவும் உகந்து கட்டி அணைத்து தம் பேரருளை அதில் பாய்ச்சினார்.

    இந்த விக்ரஹம் "தாம் உகந்த திருமேனி" என்று பிரசித்தமாக அறியப்படுகிறது. தமிழ்மொழியின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் முதலியாண்டான். இப்படி பலவகையிலும் சிறப்பு மிக்க முதலியாண்டானின் அவதார நன்னாள் இன்று. வைணவ ஆலயங்களிலும் வைணவ அடியார்களின் இல்லங்களிலும் இந்த நட்சத்திரம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்.

    • செட்டிநாட்டு பகுதிகளில் கோலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம்.
    • எல்லா நாட்களிலும் வீட்டு வாசலில் கோலம் இடுவது மரபு.

    லட்சுமி தேவி நம் இல்லத்தில் குடியேற வேண்டும் என்பதற்காக நாம் எத்தனையோ வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். அவற்றுள் ஒன்றுதான் பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றி கோலமிட்டு வழிபடுவதாகும்.

    செட்டிநாட்டுப் பகுதிகளில் கோலத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். இப்பொழுது நகரங்களில் எல்லாம் கோலப் போட்டிகள் நடத்தி கோலம் இடும் கலையை வளர்த்து வருகிறார்கள். வெள்ளிக் கிழமை மட்டுமல்லாமல், எல்லா நாட்களிலும் வீட்டு வாசலில் கோலம் இடுவது மரபு.

    கோலங்களில் பல வகைகள் உள்ளன. அவை மாக்கோலம், பூக்கோலம், ரங்கோலி, நடுவீட்டுக் கோலம், பின்னல் கோலம் என்றெல்லாம் இருக்கின்றன. அதிகாலையில் வீட்டு முகப்பில் சாணம் தெளித்து கோலம் போட்டால், லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை. அவரவர் இல்லங்களில் அவரவர்களே கோலமிடுவது மிகவும் சிறப்பு.

    முன்காலத்தில் தமிழர்கள் சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து, காலைக் கடன்களை முடித்து குளித்து, அதன்பிறகு வாசலில் நீர் தெளித்து கோலம் போடுவது வழக்கம். வாசல் தெளிக்கும் போது முன்பெல்லாம் சாணம் தெளிப்பார்கள்.

    சாணம் ஒரு கிருமி நாசினி. செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் மாவிலைத் தோரணங் களை வாசலின் நிலைப்படியில் கட்டுவார்கள். கிருமிகளை ஈர்க்கக்கூடிய ஆற்றலும் உண்டு.

    காலையில் பெண்கள் குனிந்து கோலமிடுவதன் மூலம் உட ற்பயிற்சியோடு, நல்லதொரு கோலக்கலையும் வளர வழிவகுத்தனர். பண்டிகை தினங்களான புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், திருக்கார்த்திகை, கிருஷ்ண ஜெயந்தி போன்ற நாட்களில் வண்ணக் கோலம் இடுவதும் நம் வழக்கம்.

    கிருஷ்ண ஜெயந்தியன்று நம் வீட்டிற் குள் கிருஷ்ணர் அடியெடுத்து வைப்பது போல சிறிய பாதங்களை வரைவார்கள். வீதியில் இருந்து பூஜை அறை வரை கிருஷ்ணன் பாதக் கோலம் வரையப்படும். நம்வீட்டில் நடக்கும் பூஜையை கண்ண பரமாத்மா வந்து ஏற்றுக் கொள்வதாக நம்பிக்கை.

    மாதங்களிலேயே மார்கழி மாதத்தில்தான் கோலத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின் றோம். மற்ற மாதங்களில் மக்கள் கோலத்தை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. ஆனால் அலங்கோலமான வாழ்வை மாற்றுவது மாக்கோலமிட்டு செய்யப்படும் வழிபாடுதான் என்பதை அனுபவத்தில் தான் உணர முடியும்.

    `கோலம்' என்றால் 'அழகு' என்று பொருள். வீட்டை அலங்கரித்தால் மகிழ்ச்சியும் குடியேறும். மனதை அழகு படுத்தினால் இறைவனும் குடியேறுவான். நமது வாழ்வில் சகல நாட்களும் சந்தோஷம் பெருக வேண்டுமானால், அன்றாடம் சமையலறையில் அடுப்பிற்கு கோலம் இட வேண்டும்.

    துளசி மாடத்தின் முன்பும், வீட்டின் முன் வாசலிலிலும் கோலம் இட வேண்டும். அடுப்பில் கோலமிட்டு அன்னலட்சுமியை வரவேற்றால், அஷ்டலட்சுமிகளும் தாங்களாகவே வந்துசேர்வார்கள்.

    இதயக் கமலம், ஐஸ்வரியக் கோலங்கள் இடும்பொழுது கண்டிப்பாக கால்களில் மிதிக்கக் கூடாது. பொதுவாக யாருமே கோலத்தை மிதிக்கவோ. அழிக்கவோ கூடாது. கோலத்தை நாம் மங்கலமாகக் கருதி கொண்டாட வேண்டும். கோலம் இடுவதில் அழகும் இருக்கிறது, புண்ணிய மும் சேர்கிறது.

    கோலம் போடுவதற்கு பச்சரிசி மாவை உபயோகப்படுத்துவது நல்லது. அதாவது நாம் அரிசி மாக்கோலம் போடும் பொழுது, அந்த அரிசி மாவை எறும்புகள் மற்றும் ஊர்வன சாப்பிடுவதன் மூலம் அன்னதானம் செய்த பலன் நமக்கு கிடைத்து புண்ணியம் வந்து சேரும்.

    எனவே லட்சுமி இல்லத்தில் குடியேற ஒவ்வொரு நாளும் அதிகாலையில் வீட்டு முகப்பில் அழகிய கோல மிட்டு வரவேற்போம். ஆரோக்கியமான வாழ்வும். செல்வச் செழிப்புமிக்க வாழ்வும் அமைய வழிவகுப்போம்.

    • ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி. சூரியனார் கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை.
    • காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, சித்திரை 29 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : பஞ்சமி மறுநாள் விடியற்காலை 5.28 மணி வரை. பிறகு சஷ்டி.

    நட்சத்திரம் : திருவாதிரை நண்பகல் 1.40 மணி வரை. பிறகு புனர்பூசம்.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை

    ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி. சூரியனார் கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - மகிழ்ச்சி

    ரிஷபம் - ஆசைஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    மிதுனம் - பொறுமை

    கடகம் - ஆர்வம்

    சிம்மம் - வெற்றி

    கன்னி - இரக்கம்

    துலாம் - சுகம்

    விருச்சிகம் - நற்செயல்

    தனுசு - போட்டி

    மகரம் - பொறுமை

    கும்பம் - பெருமை

    மீனம் - பொறுப்பு

    • திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-28 (சனிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சதுர்த்தி மறுநாள் விடியற்காலை 5.17 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம் : மிருகசீர்ஷம் நண்பகல் 1.08 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை

    திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு. சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் பூத வாகனத்தில் திருவீதி உலா. தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு. காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் வெள்ளி கேடயத்தில் புறப்பாடு. வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் ரத உற்சவம். திருச்செங்காட்டங்குடி ஸ்ரீ உத்திரபதீஸ்வரர் தேரோட்டம். வீரன்மீண்ட நாயனார் குருபூஜை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - அனுகூலம்

    ரிஷபம் - ஆதரவு

    மிதுனம் - சுபம்

    கடகம் - வெற்றி

    சிம்மம் - தனம்

    கன்னி - நற்செயல்

    துலாம் - உதவி

    விருச்சிகம் - பாசம்

    தனுசு - பணிவு

    மகரம் - தெளிவு

    கும்பம் - பண்பு

    மீனம் - உவகை

    • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
    • கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, சித்திரை 27 (வெள்ளிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : துவிதியை காலை 6.32 மணி வரை. பிறகு திருதியை நாளை விடியற்காலை 4.56 மணி வரை. பிறகு சதுர்த்தி.

    நட்சத்திரம் : ரோகிணி நண்பகல் 1.02 மணி வரை. பிறகு மிருகசீர்ஷம்.

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை

    இன்று அட்சய திருதியை மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் உற்சவம் ஆரம்பம். வீரபாண்டி ஸ்ரீகவுமாரியம்மன் சந்நிதி தெருவில் தேரோட்டம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பொறுமை

    ரிஷபம்-உதவி

    மிதுனம்-நற்செயல்

    கடகம்-ஆக்கம்

    சிம்மம்- பாசம்

    கன்னி-சுகம்

    துலாம்- போட்டி

    விருச்சிகம்-அமைதி

    தனுசு-அனுகூலம்

    மகரம்-உற்சாகம்

    கும்பம்-உறுதி

    மீனம்-பாசம்

    • நல்ல காரியங்களை செய்யும்போது காலண்டரில் மேல்நோக்கு நாளா, கீழ்நோக்கு நாளா, சமநோக்கு நாளா என்று பார்ப்போம்.
    • மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் இவை மூன்றும் அன்றைய தின நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன.

    தினசரி நாள்காட்டியை நாம் தினமும் பயன்படுத்தினாலும், அதில் உள்ள ஒரு சில விஷயங்கள் நாம் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம்.

    நல்ல காரியங்களை நாம் செய்யும்போது தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாளா, கீழ்நோக்கு நாளா, சமநோக்கு நாளா என்று பார்ப்போம். மேல்நோக்கு நாளில் சுபகாரியங்களை செய்வோம். ஆனால் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்றால் என்ன என்று தெரியுமா...?

    அந்த வகையில் தினசரி நாள்காட்டியில் உள்ள ஒரு விஷயம்தான் மேல் நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் போன்ற நாட்கள். இந்த நாட்கள் அனைத்து நாள்காட்டியிலும் இருக்கும். ஆனால் நாம் அதை பொதுவாக, "மேல்நோக்கு" என்றால் "நல்ல நாள்" என்றும், "சமநோக்கு" என்றால் "சுமாரான நாள்" எனவும், "கீழ்நோக்கு நாள்" என்றால் "கெடுதலான" நாளாகவும் எண்ணி அந்த நாட்களில் தவறான காரியங்களில் ஈடுபடுகிறோம்.

    மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் இவை மூன்றும் அன்றைய தின நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன.

    நட்சத்திரங்கள் மொத்தம் 27 இவைகளை நம் முன்னோர்கள் ராசிமண்டல அடிப்படையில் மூன்றாக பிரித்தனர்.

    1. "ஊர்த்துவமுக" நட்சத்திரம்

    2. "அதோமுக" நட்சத்திரம்

    3. "த்ரியமுக" நட்சத்திரம்.

    1. ரோகிணி,

    2. திருவாதிரை,

    3. பூசம்,

    4. உத்திரம்,

    5. உத்திராடம்,

    6. திருவோணம்,

    7. அவிட்டம்,

    8. சதயம்,

    9. உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும் "ஊர்த்துவமுக" நட்சத்திரங்கள்.

    இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள் "மேல்நோக்கு நாட்கள்" எனப்படும்.

    இன்னாட்களில்… "மேல்நோக்கி" வளர்கின்ற பயிர்களுக்காக விதை விதைத்தல், மரங்களை நடுதல், மேல்நோக்கி எழும் கட்டிடங்கள்(வீடு), உயரமான மதில் போன்றவற்றைக் கட்ட ஆரம்பிக்க உரிய நாட்கள் ஆகும்.

    இரண்டாவதாக,

    1. பரணி,

    2. கிருத்திகை,

    3. ஆயில்யம்,

    4. மகம்,

    5. பூரம்,

    6. விசாகம்,

    7. மூலம்,

    8. பூராடம்,

    9. பூரட்டாதி

    ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் "அதோமுக" நட்சத்திரங்கள் எனப்படும். அதாவது… இந்த நட்சத்திரம் கொண்ட நாட்கள் "கீழ்நோக்கு நாள்" எனப்படுகிறது.

    இந்த நாட்களில்… கிணறு வெட்டுதல், புதையல் தேடுதல், சுரங்கப் பணிகளை மேற்கொள்ளுதல், பூமிக்கடியில் வளரும் கிழங்கு வகைச் செடிகளைப் பயிரிடுதல் முதலான பணிகளைச் செய்வது நல்லது.

    மூன்றாவது வரும் 9 நட்சத்திரங்கள்:

    1. அஸ்வினி,

    2. மிருகசீரிஷம்,

    3. புனர்பூசம்,

    4. ஹஸ்தம்,

    5. சித்திரை,

    6. சுவாதி,

    7. அனுஷம்,

    8. கேட்டை,

    9. ரேவதி

    ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் "த்ரியமுக" நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்கள் கொண்ட நாட்கள் "சமநோக்கு" நாட்கள் எனப்படும் இந்த நாட்களில்… வாகனங்கள், கார், பைக் வாங்குதல், செல்லப்பிராணிகள், ஆடு, மாடு, காளை வாங்குதல், சாலை அமைத்தல், வாசக்கால் வைத்தல், வயல்(ஏறு) உழுதல் ஆகிய பணிகளைச் செய்வது உத்தமம்.

    மேற்கண்ட நாட்களை நினைவில் வைத்துக்கொண்டால், எந்த நாளில் என்ன காரியங்கள் செய்தால் பலன் கிடைக்கும் என்பதை, எளிதாக அறிந்து கொள்ளலாம்.

    இதுபோன்ற எளிமையான விஷயங்களை நாமே அறிந்துகொண்டு அந்த அந்த நாட்களுக்குரிய பணிகளில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

    நமது முன்னோர் பல விஷயங்களை மிக நுணுக்கமாக அலசி ஆராய்ந்து அனுபவப்பூர்வமாக விளக்கியும் வைத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாண்டவர்கள் வனவாசம் செய்யும்போது கடவுள் அவர்களுக்கு அள்ள அள்ள உணவு குறையாத அட்சயபாத்திரம் அளித்தார்.
    • இந்துக்களும் ஜைனர்களும் இந்த நாளை மிக புனிதமான நாளாக கொண்டாடுகின்றனர்.

    விவசாய நாடான இந்தியாவில் குறிப்பாக கிழக்கு இந்தியாவில் அட்சய திருதியை நன்னாளை முதல் உழவு நாளாக தொடங்குகின்றனர். அட்சய திருதியை நன்னாளில்தான் கடவுளர்களின் பொருளாளர் பதவியை ஏற்று குபேரர் லட்சுமி தேவியை வணங்கி போற்றினார்.

    புதிய தொழில் தொடங்குவதற்கும் வீட்டின் கட்டுமான பணியை ஆரம்பிப்பதற்கும் மிகவும் சிறப்பான நாளாக அட்சய திருதியை நன்னாள் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாள் மிகவும் அதிர்ஷ்டம் தரக்கூடிய நாள் இந்த தினத்தில் தங்கம் வாங்கினால் அதிக அளவிற்கு பொருள் சேரும் என இந்த குறிப்பிட்ட நாளில் தங்க ஆபரணங்களை வாங்க மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இந்த நாளின் சிறப்பு என்னவென்றால் விநாயகர் மகாபாரதம் எழுதத் தொடங்கிய நாள். பரசுராமர் அவதரித்த தினம்.

    பாண்டவர்கள் வனவாசம் செய்யும்போது கடவுள் அவர்களுக்கு அள்ள அள்ள உணவு குறையாத அட்சயபாத்திரம் அளித்தார். அன்னபூரணி தேவி பிறந்த நாளும் இதுவே. என இந்த நாளுக்கும் அட்சய என்கின்ற பதத்திற்கும் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்

    தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் சுக்கிர பட்சத்தில் மூன்றாவது நாளில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்துக்களும் ஜைனர்களும் இந்த நாளை மிக புனிதமான நாளாக கொண்டாடுகின்றனர் பலர் திருமணங்களை இந்த நாளில் முடிவு செய்கின்றனர்.

    இந்த நன்னாளில் நாம் செய்கின்ற நற்காரியங்களும் நமக்கு பல மடங்கு வாழ்வில் நன்மை பயக்கும் மேலும் தொடர்ந்து நல்ல செயல்கள் பல செய்யக்கூடிய சூழலை நம் வாழ்வில் ஏற்படுத்தி எல்லா வளங்களையும் இறைவன் நமக்கு அருள்வார். எனவே தான் இந்நன்னாளில் மக்கள் ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை அளித்து மகிழ்கின்றனர் குறிப்பாக அட்சய திருதியை கடும் கோடையில் வருவதால் பலர் நன்னாளில் தங்களால் முடிந்த அளவிற்கு பொதுமக்களுக்கு பானகம் மோர் விநியோகிக்கின்றனர். தண்ணீர் பந்தல் அமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-26 (வியாழக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : பிரதமை காலை 7.43 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம் : கார்த்திகை நண்பகல் 1.26 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம் : மரண யோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சந்திர தரிசனம், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குரு வார திருமஞ்சன சேவை

    இன்று சந்திர தரிசனம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருச்செந்தூர் முருகப்பெருமான் புறப்பாடு. காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் அன்ன வாகனத்தில் திருவீதியுலா. மங்கையர்க்கரசி நாயனார் குரு பூஜை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குரு வார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - சுகம்

    ரிஷபம் - உயர்வு

    மிதுனம் - பரிசு

    கடகம் - மேன்மை

    சிம்மம் - நட்பு

    கன்னி - சாதனை

    துலாம் - போட்டி

    விருச்சிகம் - இரக்கம்

    தனுசு - உண்மை

    மகரம் - ஊக்கம்

    கும்பம் - நன்மை

    மீனம் - கடமை

    • அக்ஷய்ய திருதீயா புண்ய காலே
    • பரதாநாத் ஸகலா: மம ஸந்து மனோரதா:

    தானம் அளிக்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்...

    அக்ஷய்ய திருதீயா புண்ய காலே அக்ஷய்ய புண்ய ஸம்பாதனார்த்தம் (பித்ரு ப்ரீத்யர்த்தம்) தர்மகடாக்ய உதகும்ப தானமஹம் கரிஷ்யே..

    ஏஷ தர்மகடோ தத்தோ ப்ரும்ஹ விஷ்ணு சிவாத்மக: அஸ்ய) பரதாநாத் ஸகலா: மம ஸந்து மனோரதா:

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'அட்சயம்' என்றால் 'குறைவில்லாதது' என்று பொருள்.
    • பசு, பட்சிகளுக்கு உணவளிப்பதும், தண்ணீர் அளிப்பதும் அளவற்ற புண்ணியத்தை தேடித்தரும்.

    மகாத்மாவான தருமரை, துரியோதனன் தன் தாய்மாமன் சகுனியின் உதவி கொண்டு சூழ்ச்சி செய்து சூதாட்டத்தில் தோற்கடித்தான். இதனால் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்கொள்ள நேர்ந்தது. அவர்கள் அஸ்தினாபுரத்தில் இருந்து திரவுபதியோடு வடக்கு நோக்கி யாத்திரையை தொடங்கினார்கள். அப்போது இந்திராதி தேவர்களும், வேதம் ஓதும் அந்தணர்களும் மற்றும் மிகுந்த பற்றுள்ள மக்களும் பாண்டவர்களின் பின் சென்றனர்.

    பஞ்சபாண்டவர்கள் அவர்களை நோக்கி, "உங்கள் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும். எனது அருமை மக்களே நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்" என்று வேண்டிக்கொண்டனர்.

    ஆனால் மக்களோ, பாண்டவர்களை நோக்கி பலவிதமாக புகழ்ந்தனர். அப்போது தருமர் அவர்களிடம், "நீங்கள் அன்பால் என்னை இவ்வாறு புகழ்கிறீர்கள். எங்களிடம் இல்லாத உயர்ந்த குணங்களை கூட எங்களிடம் உள்ளது போல் சொல்கிறீர்கள். உங்கள் அன்புக்கு நான் கட்டுப்படுகிறேன். இருப்பினும் நீங்கள் திரும்பி செல்லுங்கள்" என்று கூறினார். பின்பு பஞ்ச பாண்டவர்கள், கங்கை கரையில் இருந்த பிரமாணக்கோடி என்னும் ஆலமரத்திற்கு அருகில் சென்று, அன்று இரவை அங்கேயே கழித்தனர்.

    அப்போதும் சில அந்தணர்களும் குறிப்பாக அக்னி ஹோதிரிகள் (தினமும் யாகம் செய்யக்கூடிய அந்தணர்களும்) மற்றும் அவர்களது உறவினர்களும் திரும்பி செல்லாமல் நூற்றுக்கணக்கில் பாண்டவர்களுடன் வந்தனர். அவர்களை நோக்கி தருமர், "ராட்சசர்கள் மற்றும் கொடிய மிருகங்கள் வசிக்கும் இந்த இடத்தில் எங்களுடன் ஏன் வருகிறீர்கள்" என்று கேட்டாலும், அவர்களின் அன்பான பேச்சால் மகிழ்ச்சி அடைந்தார்.

    இந்த நிலையில் ஒரு காரியம் அவர் மனதை நெருடியது. "சன்னியாசிகளும், அந்தணர்களும், உறவினர்களும் நம்முடன் வருகின்றனர். இவர்களின் பசியை போக்க வேண்டியது எனது கடமை. தர்ம சாஸ்திரத்தில் விதித்தபடி தேவர்களுக்கும், நம்மை தேடி வந்த விருந்தினர்களுக்கும், நாய்களுக்கும், காக்கைக்கும், அன்னம் இடாவிட்டால் மகா பாவம். எனவே இதற்கு என்ன செய்யலாம்" என வருத்தப்பட்டார்.

    அப்போது சவுனகர் என்ற மகா முனிவர் அங்கு வந்தார். அவர் தருமரை நோக்கி, "தவத்தின் மூலம் உன் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள முடியும். யோக சித்தியை அடையும் முயற்சியில் ஈடுபட வேண்டும். தவத்தின் மூலம் அடைய முடியாதது எதுவுமில்லை" என்றார்.

    இதையடுத்து தருமர் தன் புரோகிதரான தவுமியரிடம் ஆலோசனை கேட்டார். தவுமியரோ, "தர்ம ராஜாவே.. பிராணிகள் எல்லாம் ஒரு சமயம் கடும் பசியால் துன்பமடைந்த பொழுது, சூரியபகவான் அந்த ஜீவன்கள் மேல் இரக்கம் கொண்டு பூமியில் மேக ரூபமாக மாறி மழை நீரை வெளிப்படுத்தினார். அந்த மழை நீரால் பூமி செழித்து, அனைத்து ஜீவ ராசிகளின் பசியும் தீர்ந்தது. சூரியன் அன்ன ரூபம் ஆனவர். அனைத்து உயிரையும் காக்கக்கூடியவர். எனவே நீ அவரை நோக்கி தவம் செய்" என்றார்.

    தருமரும் ஒரு மனதுடன் அன்ன ஆகாரம் இன்றி சூரிய பகவானின் விசேஷமான 108 நாமத்தை கூறி தவம் இயற்றினார். பின்னர் சூரிய பகவானை நோக்கி, "12 ஆதித்யர்களும், 11 ருத்திரர்களும், அஷ்டவசுக்களும், இந்திரனும், பிரஜாபதியும், ஆகாசத்தில் சஞ்சரிக்கும் சித்தர்களும், உங்களை ஆராதித்து சித்தி அடைந்தனர். தங்களை ஆராதிப்பதால் ஏழு வகை பித்ருக்களும் திருப்தி அடைகின்றனர். தாங்கள் எனக்கு உதவ வேண்டும்" என்று தருமர் கேட்டுக் கொண்டார்.

    அதற்கு சூரிய பகவான், "தர்மராஜா.. நீ வேண்டியது அனைத்தும் உனக்கு கிடைக்கும்படி செய்கிறேன். இப்பொழுது நான் தரும் பாத்திரம் உனக்கு 12 ஆண்டு வரை சக்தி உள்ளதாக இருக்கும். இந்த பாத்திரத்தை பெற்றுக்கொள். இதில் நீ இடும் பழமோ, கிழங்கோ, கீரையோ, காய்கறிகளோ அல்லது அவற்றை கொண்டு தயார் செய்த உணவோ, தான் உண்ணாமல் திரவுபதி அந்த உணவை பரிமாறிக் கொண்டே இருக்கும் வரை, அது வளர்ந்து கொண்டே இருக்கும். இன்றைய தினத்தில் இருந்து நீ இதை பயன்படுத்தலாம்" என்றார்.

    தருமரும் ஒரு அடுப்பு மீது அந்த பாத்திரத்தை வைத்து சமையல் தயார் செய்தார். அதில் தயாரித்த உணவு சிறிய தாக தோன்றினாலும், அந்த பாத்திரத்தின் சக்தியால் அது வளர்ந்து கொண்டே இருந்தது. அங்கிருந்த அனைவருக்கும் உணவளித்த பிறகு மீதமிருந்த அன்னத்தை பிரசாதமாக தருமரும் மற்றவர்களும் சாப்பிட்டனர். இறுதியாக திரவுபதி சாப்பிட்டாள். அட்சய பாத்திர மகிமையால் அங்கிருந்த அனைவரும் பசி நீங்கி மகிழ்ந்தனர். 

    தருமர், மற்றவர்களின் பசியை தீர்க்க சூரிய பகவானிடம் இருந்து, சித்திரை மாதம் வளர்பிறை திருதியை திதி அன்று அட்சய பாத்திரம் பெற்றதால் அந்த தினம் 'அட்சய திருதியை' என அழைக்கப்பட்டது.

    'அட்சயம்' என்றால் 'குறைவில்லாதது' என்று பொருள். சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய இந்த திருதியை மிக விசேஷமானது. அன்று தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகளோ, அபிஷேகமோ, ஜபமோ, ஹோமமோ மற்ற நாட்களை விட பல மடங்கு உயர்ந்த பலன்களைத் தரும். அன்றைய தினம் ஏழைகளுக்கு வழங்கப்படும் அன்னதானம், நீர் மோர் போன்றவை நமக்கு குறைவற்ற செல்வத்தை பெற்றுத் தரும். சிலர் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று தவறாக நினைக்கின்றனர். ஆனால் அது தானத்தையும், தர்மத்தையும் தான் சிறப்பாக சொல்லியுள்ளது.

    முன்னோர்களின் (பித்ருக்களின்) பிரீதிக்காக நீர் நிறைந்த ஒரு செப்பு பாத்திரத்தை தானம் செய்வார்கள். இதற்கு 'தர்மகட தானம்' என்று பெயர். இதனால் நம் முன்னோர்கள் பித்ரு லோகத்தில் தாகமின்றி இருப்பார்கள். ஒரு செப்பு பாத்திரத்தில் அல்லது கலசத்தில் நல்ல நீரை நிரப்பி ஏலக்காய் மற்றும் வாசனை திரவியங்களை சேர்த்து அதற்கான மந்திரத்தை சொல்லி தானம் அளிப்பது மிகச் சிறப்பானது. 

    இந்த நாளில் எந்தவிதமான பாகுபாடும், ஏற்றத்தாழ்வுகளும் பார்க்காமல் அனைவருக்கும் அன்னதானம் அளிப்பது உயர்ந்த பலனை தரும். மேலும், பசு, பட்சிகளுக்கு உணவளிப்பதும், தண்ணீர் அளிப்பதும் அளவற்ற புண்ணியத்தை தேடித்தரும். இறந்த முன்னோர்களுக்கு நல்ல கதி உண்டாகும். வேதம் படித்த பெரியோர்களுக்கு குடை, விசிறி, நீர் மோர் போன்றவை அளிப்பார்கள். மேலும் அட்சய திருதியை அன்று தான் கிரத யுகம் ஆரம்பித்த நாள். எனவே அன்று கட்டாயம் தர்ப்பணம் செய்வது மிகுந்த புண்ணியத்தை தரும்.

    - 'ஜோதிட சிம்மம்' சுவாமி கண்ணன் பட்டாச்சாரியா.

    • 108 சிவ தாண்டவங்களுள் ஏழு வகைத் தாண்டவங்கள் சிறப்புடையவை.
    • சிவாய நம என்பது சூட்சம பஞ்சாட்சரம்.

    தாண்டவம் என்பதை வடமொழியில் நிருதயம் என்பர். தெய்வீக பாவனைக்கேற்ப உடலின் வெவ்வேறு உறுப்புகளும் இயங்குவது தாண்டவம். சிவன், காளி, ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோர் தாண்டவங்களை நிகழ்த்தி உள்ளனர் என்பதை புராணங்கள் மூலம் அறிகிறோம்.

    108 சிவ தாண்டவங்களுள் ஏழு வகைத் தாண்டவங்கள் சிறப்புடையவை எனப்படுகிறது. அவை காளிகா தாண்டவம், சந்தியா தாண்டவம், கவுரி தாண்டவம், சங்கார தாண்டவம், திரிபுர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், ஆனந்தத் தாண்டவம் என்பன. இவை ச, ரி, க, ம, ப, த, நி என்ற சப்த (7) சுரங்களிலிருந்து தோன்றியவை. பஞ்ச சபைகளில் ஆடியவை, சிவனது நடன சபை (அரங்குகள்) ஐந்து. திருநெல்வேலி தாமிர சபையில் ஆடியது. காளிகா தாண்டவம். மதுரை வெள்ளியம்பலத்தில் ஆடியது சந்தியா தாண்டவம்.

    பாண்டி நாட்டுத் திருப்புத்தூரில் ஆடியது (சிற் சபையில்) கவுரி தாண்டவம். இருண்ட நள்ளிரவில் சங்கார தாண்டவம், திருக்குற்றால சித்திர சபையில் திரிபுர தாண்டவம்; திருவாலங்காட்டு ரத்தின சபையில் ஊர்த்துவ தாண்டவம் (காளியுடன் போட்டியிட்ட தாண்டவம்), ஆனந்தத் தாண்டவம் தில்லை பொன்னம்பலத்தில் (சிதம்பரம்) ஆடியவை.

    சிவாய நம என்பது சூட்சம பஞ்சாட்சரம். துடியேந்திய கையில் 'சி' எழுத்தும், வீசிய கரத்தில் 'வா' என்ற எழுத்தும் அபய கரம் 'ய' என்ற எழுத்தையும் தீச்சுடர் ஏந்தியகரம் 'ந' என்ற எழுத்தையும் திருவடியின் கீழ் உள்ள முயலகன் 'ம' என்ற எழுத்தையும் பொருத்திக் காணலாம்.

    துடி ஏந்திய வலக்கரம் படைத்தல் தொழிலையும், அபயகரம் காத்தலையும், தீச்சுடர் ஏந்திய கரம் அழித்தலையும், மற்றொரு கரம் உயிர்களுக்கு முக்தி அருளும் திருவடியையும் காட்டுகிறது. முயலகனை மிதித்துள்ள திருவடி அருள் புரிதலையும் குறிப்பிடுவதாகும். இவ்வாறு சிவாயநம என்ற ஐந்தெழுத்தும் நடராஜர் திருஉருவத்தில் உள்ள தத்துவங்களாகும்

    ×