search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹூஸ்டனில் உள்ள பாதுகாப்பு மையத்தில் ஒரு பெண் குழந்தையை தூக்கி அரவணைத்து இருக்கும் காட்சி
    X
    ஹூஸ்டனில் உள்ள பாதுகாப்பு மையத்தில் ஒரு பெண் குழந்தையை தூக்கி அரவணைத்து இருக்கும் காட்சி

    அமெரிக்காவில் வெள்ளம் பாதித்த பகுதியில் ரசாயன ஆலைகளில் வெடிவிபத்து

    அமெரிக்காவில் ஹார்வே புயலின் தாக்கம் மற்றும் மழை காரணமாக ரசாயன ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
    ஹூஸ்டன்:

    அமெரிக்காவில் ‘ஹார்வே’ புயல் தாக்கியது. அதில் டெக்சாஸ் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள், தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    இந்த நிலையில் ஹூஸ்டனின் வடமேற்கில் உள்ள கிராஸ்பீ நகரில் ரசாயன ஆலையில் 2 வெடி விபத்துகள் ஏற்பட்டன. உடனே அங்கு மீட்பு குழுக்கள் விரைந்தன.

    அங்கு ரசாயன பொருட்கள் தீப்பிடித்து மேலும் வெடி விபத்துகள் நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். எனவே ரசாயன ஆலையை சுற்றி தங்கியுள்ள பொது மக்கள் வெளியேற்றப்பட்டனர்.



    ஹார்வே புயலின் தாக்கம் மற்றும் மழை காரணமாக ரசாயன ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர். அதில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் கண், தோல் மற்றும் சுவாச உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.
    Next Story
    ×