search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: துணை கேப்டனாக ரஹானே நியமனம்
    X

    இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: துணை கேப்டனாக ரஹானே நியமனம்

    இலங்கை உடனான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் விராட் கோலி தலைமையிலான 16 வீரர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.
    மும்பை:

    நியூசிலாந்து அணி உடனான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த பின்னர் இந்தியா அணியானது இலங்கையை எதிர்கொள்கிறது. நவம்பர் மாதம் 16-ம் தேதி தொடங்கும் இந்த தொடரில் மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள், இரண்டு டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.

    இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி மற்றும் நியூசிலாந்து அணியுடனான டி20 போட்டியில் விளையாடும் வீரர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    டெஸ்ட் அணி விபரங்கள்:-

    விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), கே எல் ராகுல், முரளி விஜய், ஷிகர் தவான், புஜாரா, ரோகித் ஷர்மா, விருத்திமான் சாகா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, முகம்மது சமி, புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்

    ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    டி20 அணி விபரங்கள்:

    விராட் கோலி (கேப்டன்), தினேஷ் கார்த்திக், ரோகித் ஷர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, பூம்ரா, தவான், ராகுல், மணிஷ் பாண்டே, சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஷ்ரேயாஸ் ஐயர் (புதுமுகம்), முகம்மது சிராஜ் (புதுமுகம்), ஆசிஷ் நெஹ்ரா

    ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். இதில், முதல் டி20 போட்டியில் மட்டும் ஆசிஷ் நெஹ்ரா விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×