search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று டெல்லியும், நாக்பூரும் முடிவு செய்ய முடியாது: பினராயி விஜயன்
    X

    நாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று டெல்லியும், நாக்பூரும் முடிவு செய்ய முடியாது: பினராயி விஜயன்

    நாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று டெல்லியும், நாக்பூரும் முடிவு செய்ய முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை அரசாணை வெளியிட்டது. எருமை, பசு, ஒட்டகம், காளை உள்ளிட்ட கால்நடைகளையும் இறைச்சிக்காக விற்பனை செய்ய தடையையும்,  கட்டுப்பாடுகளை விதித்தது.

    அதன்படி, விவசாயிகள் மட்டும் மாடுகளை சந்தைகளில் விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சந்தைகளில் மாடுகளை விற்பனை செய்பவர்கள் எழுத்துப்பூர்வமாக இதற்கான உறுதியை அளிக்க வேண்டும். மாட்டுச் சந்தை கமிட்டியும் மாடு விற்பனை செய்வது இறைச்சிக்காக அல்ல, விவசாய தேவைக்கு தான் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    மத்திய அரசின் புதிய உத்தரவுக்கு தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களிலும் ஈடுபட்டனர். 

    இந்நிலையில், நாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று டெல்லியும், நாக்பூரும் முடிவு செய்ய முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிராக உள்ளதாக கூறினார். 

    கேரள முதல்வர் மட்டுமல்லாது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிபுரா முதல்வர் பட்நாயக் உள்ளிட்டோரும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

    கடும் எதிர்ப்பை தொடர்ந்து, இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்ட கால்நடைகள் பட்டியலில் இருந்து எருமை மாடுகளுக்கு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    Next Story
    ×