search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றம்
    X

    சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றம்

    ஆளுநர் உரையுடன் கடந்த திங்களன்று தொடங்கிய தமிழக சட்டசபை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார்.
    சென்னை:

    தமிழக சட்டசபை ஆளுநர் உரையுடன் கடந்த திங்கள் கிழமை தொடங்கியது. முதல் நாளே ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ஆர்.கே நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற டி.டி.வி தினகரன் முதன்முறையாக சட்டசபைக்குள் நுழைந்தார்.

    போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பான அறிக்கை, தமிழ்நாடு என பெயர்மாற்றம் செய்யப்பட்டதன் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் ஆகிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். மேலும், துணை நிதிநிலை அறிக்கையை ஓ.பன்னீர் செல்வம் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்தார். இதில், போக்குவரத்து துறை, குடிசை மாற்று வாரியம் ஆகியவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.

    எம்.எல்.ஏ.க்களுக்கான ஊதியத்தை 100 சதவிகிதம் உயர்த்தும் மசோதா, மேயர் மற்றும் நகரசபை தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்ய வழி செய்யும் மசோதா, உள்ளாட்சி அதிகாரிகளுக்கு சிறப்பு பதவி நீட்டிப்பு மசோதா ஆகியவை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.

    எம்.எல்.ஏ.க்கள் ஊதிய உயர்வை ஏற்க மாட்டோம் என்று கூறி தி.மு.க, காங்கிரஸ் உறுப்பினர்கள் மசோதாவை எதிர்த்து வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, மீண்டும் தேதி குறிப்பிடாமல் இந்த கூட்டத்தொடரை சபாநாயகர் முடித்துவைத்து அவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

    முடிந்த கூட்டத்தொடரில், தி.மு.க தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் பேசியுள்ளது, நான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ என்று தினகரன் பேசியது ஆகியவை முக்கியத்துவமாக கருதப்படுகிறது. 
    Next Story
    ×