முகத்தில் உள்ள கருமை நீங்க சந்தனத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்...

முகத்தில் உள்ள கருமை நீங்க சந்தனத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்...

Published on
சந்தனப் பவுடரை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், கழுவினால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, பொலிவாக இருக்கும்.
கற்றாழை ஜெல்லில் 1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் முகத்தில் தடவி உலர வைத்துக் கழுவ வேண்டும்.
சந்தனப் பவுடர் மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாக கலந்து, அதை பால் அல்லது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி காய வைத்து கழுவ, முகம் பிரகாசமாக இருக்கும்.
பருக்கள் அதிகம் உள்ளவர்கள், சந்தனப் பொடி மற்றும் வேப்பிலைப் பொடியை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவினால், பருக்களைப் போக்கி, முகத்தைப் பொலிவாக்கும்.
சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், முகம் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்ற ஸ்கரப் செய்ய வேண்டும்
சந்தனப் பொடியுடன், கடலை மாவை சேர்த்து, பால் ஊற்றி பேஸ்ட் செய்து, 20-30 நிமிடம் கழித்து தேய்த்து கழுவ, முகம் அழகாக ஜொலிக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com