வெளியீட்டுக்கு தயாராகும் பிக்சல் 11 சீரிஸ் மாடல்கள் - லீக் ஆன இந்திய விலை விவரங்கள்

பிக்சல் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் பிக்சல் வாட்ச் 5 மற்றும் புதிய பிக்சல் பட்ஸ் அறிமுகம் செய்யப்படலாம்.
Pixel 11 Series
Published on

கூகுள் நிறுவனம் தனது புதிய தலைமுறை பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த முறை பிக்சல் 11, பிக்சல் 11 ப்ரோ, பிக்சல் 11 ப்ரோ XL மற்றும் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்டு என மொத்தத்தில் நான்கு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

ஸ்மார்ட்போன்கள் தவிர்த்து கூகுள் நிறுவனம் பிக்சல் வாட்ச் 5 மற்றும் புதிய பிக்சல் பட்ஸ் மாடலையும் அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது. புதிய பிக்சல் சாதனங்கள் வெளியீட்டை ஒட்டி கடந்த சில வாரங்களாக புதிய சாதனங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. இதில் பிக்சல் 11 சீரிஸ் டிசைன், நிறங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை என பல்வேறு விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

வெளியீடு:

கூகுள் நிறுவனம் தனது அடுத்த ஹார்டுவேர் நிகழ்ச்சியான மேட் பை கூகுள் (Made By Google) நிகழ்வு ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடக்கும் என்று அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்விலேயே புதிய சாதனங்கள் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்று தெரிகிறது. இந்த நிகழ்விலேயே பிக்சல் வாட்ச் 5, பிக்சல் பட்ஸ் மற்றும் புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷன் அறிமுகம் செய்யப்படலாம்.

இத்துடன் கடந்த ஆண்டை போன்றே இந்த முறையும் நான்கு பிக்சல் ஸ்மார்ட்போன்கள்: பிக்சல் 11, பிக்சல் 11 ப்ரோ, பிக்சல் 11 ப்ரோ XL மற்றும் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்டு அறிமுகம் செய்யப்படலாம். இவை முந்தைய பிக்சல் 10 சீரிஸ் மாடல்களின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும்.

வடிவமைப்பு:

தோற்றத்தில் புதிய பிக்சல் 11 சீரிஸ் மாடல்கள் அதன் முந்தைய மாடல்களை போன்றே காட்சியளிக்கும் என கூகுள் வெளியிட்ட டீசர்களில் தெரியவந்துள்ளது. தோற்றம் தவிர்த்து புதிய ஸ்மார்ட்போன்களில் பிக்சல் க்ளோ என்ற அம்சம் வழங்கப்படுவதும், இது அழைப்புகள், குறுந்தகவல்கள் மற்றும் இதர நோட்டிபிகேஷன்களுக்கு கேமராவை சுற்றி மின்விளக்குகள் ஒளிரும் என்று தெரிகிறது.

சமீத்தில் இணையத்தில் லீக் ஆன ரெண்டர்களின் படி புதிய பிக்சல் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் முற்றிலும் புது நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மாரட்போன்களின் பின்புறம் கேமரா மற்றும் பேனலில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

விலையை பொருத்தவரை பிக்சல் 11 மாடல் இந்திய மதிப்பில் ரூ. 1.08 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்டு மாடலின் விலை ரூ. 2.17 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com