

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தியா 193 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது.
இந்திய தரப்பில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 81 ரன்கள் குவித்தார். ஜிம்பாப்வே அணி தரப்பில் பிராட் எவன்ஸ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து ஜிம்பாப்வே அணி விளையாட உள்ளது.
ஏற்கனவே முடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றிப் பெற்றுள்ள நிலையில், தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இப்போட்டியிலும் இந்தியா வென்றால், சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆகும் ஜிம்பாப்வே அணி.