முத்தரப்பு ஏ தொடர்: 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா!

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஏ தொடரில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
முத்தரப்பு ஏ தொடர்: 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா!
Published on

இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய முத்தரப்பு ஏ ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற்றது. இத்தொடரின் லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இன்று தம்புல்லா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 377 ரன்கள் குவித்தது.

அதனைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 47.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன்மூலம் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

இந்திய தரப்பில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 11 பந்துகளில் 5 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார். இவர் ஒட்டுமொத்தமாக 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் திலக் வர்மா பொறுப்புடன் விளையாடி 67 ரன்கள் எடுத்தார்.

ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்களும், பிரியான்ஷ் ஆர்யா 39 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியில் அதிகபட்சமாக சதீர சமரவிக்ரம 52 ரன்கள், வனுஜ சஹான் 62 ரன்கள் எடுத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com