காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்

ஆடவர் ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார் ஜண்டு குமார்.
india
Published on

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் கோலாகலமாகத் தொடங்கியது. ஆகஸ்ட் 2-ம் தேதி வரை 11 நாட்கள் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

மொத்தம் 74 நாடுகள்

இதில் காமன்வெல்த் கூட்டமைப்பில் இருக்கும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்பட 74 நாடுகளில் இருந்து 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர் .

தடகளம், பளு தூக்குதல், குத்துச்சண்டை, நீச்சல், கூடைப்பந்து (3x3), ஜிம்னாஸ்டிக் (ஆர்ஸ்டிக்), சைக்கிளிங், ஜூடோ, நெட் பால், பவுல்ஸ் வலு தூக்குதல் (பாரா பிரிவினருக்கு மட்டும்) ஆகிய 11 விளையாட்டுகள் 215 பிரிவுகளில் நடைபெறுகிறது. இதில் 6 விளையாட்டுகள் பாரா பிரிவினருக்கு நடத்தப்படுகிறது.

இதில் இந்தியா சார்பில் 126 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இதில் 78 பேர் வீரர்கள், 48 வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள். 8 விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள். 5 பாரா விளையாட்டுகளில் கலந்துகொள்கிறார்கள்.

பிரமாண்டமாக நடைபெற்ற தொடக்க விழாவில் தேசிய கொடியை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா ஆகியோர் ஏந்திச்சென்றனர்.

73 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்க இருந்த ஜூடோ வீரர் அருண்குமார் இந்திய தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் பரிசோதனையில் தோல்வி அடைந்ததால் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு போட்டியிலிருந்து விலக்கப்பட்டார்.

ஜூடோ வீராங்கனை துலிகா மான், தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார். கடந்த 12 மாதங்களில் 3 முறை தனது இருப்பிடம் குறித்த தகவலைத் தெரிவிக்கத் தவறியதால் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

முதல் பதக்கம்

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் ஜண்டு குமார் முதல் பதக்கத்தை பெற்று தந்தார். ஆடவர் ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்று அசத்தினார்.

இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்

இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பிரனதி நாயக், நிஷ்கா அகர்வால், இஷிதா ரேவால், புரோதிஸ்தா சமந்தா, ரித்தி ஷர்மா ஆகியோர் சாகசம் காட்டுகிறார்கள்.

குத்துச்சண்டையில் (60 கிலோ) மாலை 4 மணிக்கு இந்திய வீரர் சச்சின் சிவாச், கனடாவின் கியாமா அல் அக்மடியாவுடன் கோதாவில் குதிக்கிறார்.

மாலை 4.19 மணிக்கு ஆண்களுக்கான 400 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் தக்ஷன் ஷஷிகுமார் நீந்துகிறார்.

மாலை 4.49 மணிக்கு வீல்சேர் கூடைப் பந்து போட்டியில் இந்திய அணி, வேல்சை (பி பிரிவு) எதிர்கொள்கிறது.

இரவு 7.30 மணிக்கு லான் பவுல்ஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையரில் இந்திய வீரர் புதுல் சோனோவால் மலேசியாவின் இஜாத் ஷமீரை சந்திக்கிறார்.

போட்டிகளை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com