

இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 15 தொடங்கவுள்ளது. இலங்கையில் நடைபெறவுள்ள இந்தத் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்து ஜஸ்ஸ்ப்ரித் பும்ரா விலகியுள்ளார்.
இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பும்ராவின் இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் மற்றும் வீக்கம் இன்னும் முழுமையாகக் குணமடையாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் ஏற்கனவே விலகியுள்ளனர். மேலும் வாஷிங்டன் சுந்தரும் முதல் போட்டியில் பங்கேற்கமாட்டார். இந்நிலையில் பும்ராவும் விளையாடாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 அன்று காலியிலும், இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 23 அன்று கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி மைதானத்திலும் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கு முன்னதாக, அணி ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கி கொழும்பில் மூன்று நாள் பயிற்சிப் போட்டியில் விளையாடும்.
ஷுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், சாய் சுதர்சன், துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தத் படிக்கல், சரன்ஷ் ஜெயின்.