ஹம்பர்க் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை தோல்வி

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
yulia putintseva
Published on: 

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகளான ஸ்பெயினின் பவுலா படோசா, கஜகஸ்தானின் யூலியா புடின்சேவா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் கஜகஸ்தானின் யூலியா புடின்சேவா, அர்மீனியாவின் எலினா அவனேசியான் உடன் மோதினார்.

இதில் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய எலினா 6-3, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் கஜகஸ்தான் வீராங்கனை தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com