ஜெய்ஸ்வால், அஸ்வின் அபாரம் - 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்

சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரை சதமடித்து அசத்தினார்.
டிரெண்ட் போல்ட்டை பாராட்டும் சக வீரர்கள்
டிரெண்ட் போல்ட்டை பாராட்டும் சக வீரர்கள்
Published on

மும்பை:

மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்று 68-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார். 

அதன்படி, முதலில் பேட்ட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. தனி ஆளாகப் போராடிய மொயின் அலி 57 பந்துகளில் 93 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கேப்டன் தோனி 26 ரன்கள் எடுத்தார். 

ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சஹல், மெக்காய் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 

இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 2 ரன்னில் அவுட்டானார். கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்னிலும், படிக்கல் 3 ரன்னிலும், ஹெட்மயர் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி அரைசதமடித்தார். அவர் 59 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அஸ்வின் அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அஸ்வின் 40 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com