சாதனை படைத்த ரகானே, உமேஷ் யாதவ்- நேற்றைய போட்டியில் நடந்த சம்பவங்கள் ஒரு அலசல்

ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் உமேஷ் யாதவ் 2 சாதனைகளை பதிவு செய்துள்ளார்.
நேற்றை போட்டியில் நடந்த சம்பவங்கள் குறித்து ஒரு அலசல்
நேற்றை போட்டியில் நடந்த சம்பவங்கள் குறித்து ஒரு அலசல்
Published on

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா-பஞ்சாப் அணிகள் மோதின. ரசல் அதிரடியில் கொல்கத்தா அணி 14 ஓவரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வீரர்களின் சாதனைகள் மற்றும் சம்பவங்களை பார்க்கலாம்.

நேற்றைய போட்டியில் ரகானே 12 ரன்னில் அவுட் ஆனார். அவர் 8 ரன்கள் எடுத்த போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 4000 ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் அவர் 7-வது இடத்தை பிடித்துள்ளார். அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 2 சதங்களுடன் 12-வது இடத்தில் உள்ளார். 

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் உமேஷ் யாதவ் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். இதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்றவர் பட்டியலில் உமேஷ் யாதவ் முதல் இடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் யூசப் பதான், ரோகித் சர்மா, கெயில் ஆகிய 3 வீரர்கள் உள்ளனர். 

ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த வீரர்களிலும் உமேஷ் யாதவ் முதல் இடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக நரேன் 32 விக்கெட்டுகள். 3-வது இடத்தில் சென்னை அணிக்கு எதிராக மலிங்கா 31 விக்கெட்டுகள். 4-வது இடத்தில் மும்பை அணிக்கு எதிராக பிராவோ 31 விக்கெட்டுகள். 5-வது இடத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக அமித் மிஸ்ரா 30 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

பஞ்சாப் அணிக்கு எதிராக உமேஷ் யாதவ் 4 ஓவர்களில் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐபிஎல் தொடரில் இதுவே இவரின் சிறந்த பந்து வீச்சு ஆகும். இதன் மூலம் உமேஷ் யாதவ் பர்பிள் தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 30 பந்துகளில் 71 ரன்கள் குவித்த கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரசல் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார். 

பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா அணி முதல் இடத்தில் உள்ளது.

பஞ்சாப் அணி பேட்டிங் செய்த போது 5 விக்கெட்டுகள் சரிந்த நிலையில் ஷாருக்கான் களமிறங்கினார். அவர் 5 பந்துகள் சந்தித்த நிலையில் சவுத்தி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அந்த விக்கெட்டை வீழ்த்திய போது கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர் ஷாருக்கான் ஸ்டைலில் கைகளை உயர்த்தினார். இந்த ஸ்டைலை பார்த்த ஷாருக்கானின் மகள் சிரித்தப்படி துள்ளிக்குதித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com