இரட்டை சதம் அடித்த ஜெய்ஸ்வால் நட்சத்திர வீரராக திகழ்வார்- கிராலி பாராட்டு

இங்கிலாந்து அணியில் அதிக ரன் எடுத்தவர் கிராலி ஆவார்.பும்ராவின் பந்து வீச்சு நம்ப முடியாத வகையில் அபாரமாக இருந்தது.
இரட்டை சதம் அடித்த ஜெய்ஸ்வால் நட்சத்திர வீரராக திகழ்வார்- கிராலி பாராட்டு
Published on

இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் ஜெய்ஸ்வால் 209 ரன் குவித்து முத்திரை பதித்தார். தனது 6-வது டெஸ்டில் முதல் முறையாக இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதேபோல பும்ரா 45 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த இருவரது பங்களிப்பையும் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் கிராலி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஜெய்ஸ்வாலின் ஆட்டம் அபாரமாக இருந்தது. நம்ப முடியாத இன்னிங்ஸ் அவர் ஒரு அற்புதமான வீரராக திகழ்கிறார். அவர் நட்சத்திர வீரராக உருவெடுப்பார்.

பும்ராவின் பந்து வீச்சு நம்ப முடியாத வகையில் அபாரமாக இருந்தது. இது மாதிரியான ஆடுகளத்தில் சிறப்பாக வீசியது பாராட்டத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

இங்கிலாந்து அணியில் அதிக ரன் எடுத்தவர் கிராலி ஆவார். தனது 26-வது பிறந்தநாளில் அவர் 76 ரன்கள் எடுத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com