உலக சாம்பியன்ஷிப் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரருக்கு தங்கம்

அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு இந்த சாதனையைப் படைத்த இரண்டாவது இந்திய வீரர்.பாரீசில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.
 ருத்ராங்கஷ் பாட்டீல்
 ருத்ராங்கஷ் பாட்டீல்
Published on

எகிப்த் நாட்டின் தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் கலந்து கொண்ட 18 வயதான இந்திய வீரர் ருத்ராங்கஷ் பாட்டீல் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்த போட்டியில் இத்தாலி வீரர் டானிலோ டென்னிஸ் சொலாஸ்ஸோவை 17-13 என்ற கணக்கில் அவர் வீழ்த்தினார்.

இதன் மூலம் அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு இந்த சாதனையைப் படைத்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி துப்பாக்கிச் சூடும் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் உறுதி செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com