ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.
ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
Published on

வான்டா:

ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து, கனடா வீராங்கனையான மிச்செல் லீ உடன் மோதினார்.

இதில் பி.வி.சிந்து 16-21, 10-21 என்ற புள்ளிக்கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

பிவி சிந்து இந்தப் போட்டியில் 37 நிமிடங்களில் விளையாடி தோல்வி அடைந்தார்.

ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு களமிறங்கிய பிவி சிந்துவின் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com