ஜெய்ஷ்வாலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்- கவாஸ்கர் வலியுறுத்தல்

இளம் வீரரான அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரராக ஆடி வருகிறார்.ஜெய்ஷ்வால் 14 ஆட்டத்தில் விளையாடி 625 ரன் குவித்துள்ளார்.
ஜெய்ஷ்வாலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்- கவாஸ்கர் வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி:

ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக விளையாடி வருபவர்களில் ஒருவர் ஜெய்ஷ்வால்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 21 வயது இளம் வீரரான அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரராக ஆடி வருகிறார். ஜெய்ஷ்வால் 14 ஆட்டத்தில் விளையாடி 625 ரன் குவித்துள்ளார். அவரது சராசரி 48.08 ஆகும். ஸ்டிரைக்ரேட் 163.61 ஆக இருக்கிறது. ஒரு சதமும், 5 அரைசதமும் எடுத்து உள்ளார். 82 பவுண்டரிகளும், 26 சிக்சர்களும் அடித்து உள்ளார். ஐ.பி.எல்.லில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ஜெய்ஷ்வால் 2-வது இடத்தில் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறினால் அவரது ரன் குவிப்பு மேலும் அதிகமாகும்.

இந்நிலையில் ஐ.பி.எல்.போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் ஜெய்ஷ்வாலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் கேப்ட னும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்த சீசனில் ஜெய்ஷ்வால் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தொழில்நுட்ப ரீதியான பேட்ஸ்மேனாக இருக்கிறார். அவர் 20 முதல் 25 பந்தில் 40 முதல் 50 ரன்கள் எடுக்கிறார். 15 ஓவர்கள் விளையாடினால் சதம் அடிக்கும் வாய்ப்பு ஏற்படும். அப்போது அணிகள் ஸ்கோர் 190 முதல் 200 ரன்கள் வரை குவிக்க இயலும்.

ஜெய்ஷ்வால் 20 ஓவர் போட்டிக்கு தயாராக இருக்கிறார். இதனால் இந்திய அணியில் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். நல்ல நிலையில் இருக்கும்போது வாய்ப்பு வழங்கினால் தான் அவருக்கு நம்பிக்கையும் அதிகமாக இருக்கும்.

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com