

ஐபிஎல் தொடரில் தற்போது பிளே ஆப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது தகுதிச்சுற்றில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதையடுத்து நேற்று நடைபெற்ற வெளியேறுதல் சுற்று ஆட்டத்தில் ஐதராபாத்-ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் சூர்யவன்ஷியின் ருத்ரதாண்டவ ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி 243 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து 2-வது பேட்டிங் செய்த ஐதராபாத் அணியால் 196 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
அதன்படி, நாளை நடைபெறும் 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி, முதலாவது தகுதிச்சுற்றில் தோல்வியடைந்த குஜராத் அணியுடன் மோதுகிறது.
இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். நியூ சண்டிகார் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.