செஸ் ஒலிம்பியாட்: 10வது சுற்றிலும் இந்திய அணி வெற்றி

45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இன்று நடந்த 10-வது சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்றது.
செஸ் ஒலிம்பியாட்: 10வது சுற்றிலும் இந்திய அணி வெற்றி
Published on

புடாபெஸ்ட்:

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் இன்று அரங்கேறிய 10-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி, அமெரிக்காவைச் சந்தித்தது.

இதில் அர்ஜூன் எரிகேசி, குகேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார். இறுதியில் இந்தியா 2.5-1.5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 19 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய ஆண்கள் அணி தங்கத்தை நெருங்கியது.

இந்திய மகளிர் அணி சீனாவுடன் நடந்த போட்டியில் 2.5 - 1.5 புள்ளிக்கணக்கில் வென்றது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 17 புள்ளிகள் பெற்றுள்ளது.

11 சுற்றுகள் கொண்ட 10 போட்டிகளில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. இன்னும் மீதமுள்ள ஒரு போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி தங்கம் வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com