சொந்த மண்ணில் ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா - மீண்டும் டி20 தரவரிசையில் முதலிடம்!

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடர்களில் சந்தித்த தோல்விகளுக்குப் பின் மீண்டும் வெற்றி.
சொந்த மண்ணில் ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா - மீண்டும் டி20 தரவரிசையில் முதலிடம்!
Published on

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அவ்வணியை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்துள்ளது இந்திய அணி.

ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்ற 3-வது மற்றும் இறுதி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இளம் வீரர் வைபவ் சூர்யவன்சியின் அதிரடியான 81 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து 193 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் ஜிம்பாப்வே தோல்வி அடைந்திருந்த நிலையில் தொரடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.

இதற்கு முன்பு இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடர்களில் சந்தித்த தோல்விகளுக்குப் பின், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி இந்த ஒயிட்வாஷ் வெற்றியின் மூலம் மீண்டும் டி20 தரவரிசையில் தனது முதலிடத்தை வலுப்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com