செஸ் ஒலிம்பியாட் 9வது சுற்றில் டிரா: முதலிடத்தில் நீடிக்கும் இந்திய ஆண்கள் அணி

45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இன்று நடந்த 9-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி டிரா செய்தது.
செஸ் ஒலிம்பியாட் 9வது சுற்றில் டிரா: முதலிடத்தில் நீடிக்கும் இந்திய ஆண்கள் அணி
Published on

புடாபெஸ்ட்:

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் இன்று அரங்கேறிய 9-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி, உஸ்பெகிஸ்தானைச் சந்தித்தது.

இதில் அர்ஜூன் எரிகேசி, குகேஷ், விதித் குஜராத்தி மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் உஸ்பெகிஸ்தான் வீரர்களிடம் டிரா செய்தனர்.

இறுதியில் இந்தியா 2-2 என்ற புள்ளிக்கணக்கில் டிரா செய்தது. இதன்மூலம் 17 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய ஆண்கள் அணி நிச்சயம் தங்கம் வெல்லும்.

இந்திய மகளிர் அணி அமெரிக்காவுடன் நடந்த போட்டியில் டிரா செய்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 15 புள்ளிகள் பெற்றுள்ளது.

11 சுற்றுகள் கொண்ட 9 போட்டிகளில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. இன்னும் மீதமுள்ள போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தினால் நிச்சயம் தங்கம் வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com